Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

Donald Trump : எலான் மஸ்க் உடனான உறவு முறிந்துவிட்டது.. டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

Clash Between Elon Musk and Donald Trump | உலக பணக்காரர் எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், எலான் மஸ்க் உடனான உறவு முறிந்துவிட்டது என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Donald Trump : எலான் மஸ்க் உடனான உறவு முறிந்துவிட்டது.. டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 08 Jun 2025 11:30 AM

அமெரிக்கா, ஜூன் 08 : எலான் மஸ்க் (Elon Musk) உடனான உறவு முறிந்துவிட்டது. அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேரம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (American President Donald Trump) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உலக பணக்காரர் எலான் மஸ்கிற்கும், டொனால்ட் டிரம்பிற்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற டொனால்ட் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், டிரம்ப் மற்றும் மஸ்க் உறவில் விரிசல் ஏற்பட காரணம் என்ன, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே ஏற்பட்ட விரிசல்

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உலக பணக்காரர் எலான் மஸ்க் ஆகிய இருவருக்கும் இடையே நல்ல நட்பு நீடித்து வந்தது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அமெரிக்கா அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்காக எலான் மஸ்க் சாலைகளில் இறங்கி பிரச்சாரம் செய்தது மட்டுமின்றி, தேர்தல் செலவுக்காக 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளார். இவ்வாறு மிக நெருக்கமாக இருந்த டிரம்ப் மற்றும் மஸ்க் நட்புறவில் தற்போது மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.

டிரம்ப் – மஸ்க் நட்புறவில் விரிசல் ஏற்பட காரணம் என்ன?

ஜூன் 5, 2025 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் One Big Beautiful Bill என்ற மசோதாவை அறிமுகம் செய்தார். இந்த மசோதாவில் பெரிய அளவிலான வரி குறைப்புகள் இடம் பெற்றிருந்தன. இது குறித்து கூறியிருந்த டிரம்ப், இது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மிகச்சிறந்த மசோதா. இது அரசாங்கத்தின் செலவினங்களில் பெரும் தொகையை மிச்சப்படுத்தும் என கூறியிருந்தார். ஆனால், டிரம்பின் இந்த புதிய மசோதாவுக்கு எலான் மஸ்க் மாறுபட்ட கருத்து தெரிவித்திருந்தார். அது குறித்து கூறிய மஸ்க், அந்த புதிய மசோதாவால் நாட்டின் கடன் அதிகரிக்கும் என கூறியிருந்தார். இதுவே டிரம்ப் மற்றும் மஸ்க் நட்பில் விரிசல் ஏற்பட ஆரம்ப புள்ளியாக இருந்தது.

எலான் மஸ்க் எக்ஸ் பதிவு

இதனை தொடர்ந்து எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி விலக வேண்டும் என்றும், அவருக்கு பதிலாக துணை அதிபர் ஜே.டி வான்ஸ் அதிபராக வேண்டும் என்று கூறியிருந்தார். மஸ்கின் இந்த கருத்துக்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த நிலையில், மஸ்க் குறித்து பேசிய டிரம்ப் அவர் புத்தியை இழந்துவிட்டார் என்று கூறியிருந்தார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், எலான் மஸ்க் உடனான உறவு முறிந்துவிட்டது. அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேரம் இல்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!...
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!...
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே பயணிகள் ரயில் ரத்து!
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே பயணிகள் ரயில் ரத்து!...
அரசுப்பள்ளிக்கு பேருந்து நன்கொடை கொடுத்த கிராம மக்கள்
அரசுப்பள்ளிக்கு பேருந்து நன்கொடை கொடுத்த கிராம மக்கள்...