Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டிரினிடாட் சென்ற பிரதமர் மோடிக்கு உயரிய விருது.. 140 கோடி இந்தியர்கள் சார்பாக பெற்றுக்கொள்வதாக பெருமிதம்!

PM Narendra Modi Trinidad and Tobago Visit | 5 நாடுகளுக்கு 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (ஜூலை 04, 2025) டிரினிடாட் அண்டு டொபோகோவுக்கு சென்றார். அங்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் உலக சமூகம் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.

டிரினிடாட் சென்ற பிரதமர் மோடிக்கு உயரிய விருது.. 140 கோடி இந்தியர்கள் சார்பாக பெற்றுக்கொள்வதாக பெருமிதம்!
பிரதமர் மோடிக்கு உயரிய விருது
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 05 Jul 2025 07:55 AM

டிரினிடாட் அண்டு டொபாகோ, ஜூலை 05 : பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி என்றும் உலக சமூகம் அதற்கு மறுப்பு தெரிவிக்க ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர (Indian Prime Minister Narendra Modi) மோடி கூறியுள்ளார். தனது 8 நாட்கள் சுற்றுப்பயணத்தில் நேற்று (ஜூலை 04, 2025) டிரினிடாட் அண்டு டொபாகோ சென்ற பிரதமர் மோடி, அந்த நாட்டு அதிபரை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், பிரதமரின் டிரினிடாட் அண்டு டொபாகோ (Trinidad and Tobago) பயணம் குறித்தும் அங்கு அவர் ஆற்றிய உரை குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

5 உலக நாடுகளுக்கு 8 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கு 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், நேற்று (ஜூலை 04, 2025) டிரினிடாட் அண்டு டொபாகோ சென்ற அவர், அந்த நாட்டு பிரதமர் கமலா பிரிசத் பிஸ்சரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவு, வர்த்தகம்  உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். அப்போது, பிரதமர் மோடிக்கு டிரினிடாட் அண்டு டொபாகோவின் உயரிய விருதான தி ஆர்டர் ஆஃப் தி டிரினிடாட் அண்டு டொபாகோ குடியரசு விருது வழங்கப்பட்டது. 140 கோடி இந்தியர்கள் சார்பாக அங்த விருதை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.

தீவிரவாதம் மனித குலத்தின் எதிரி – பிரதமர் நரேந்திர மோடி

டிரினிடாட் அண்டு டொபாகோ நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதம் மனித குலத்திற்கு எதிரானது. இந்த Red House கூட பயங்கரவாத தாக்குதல்களின் காயங்களையும், அப்பாவி பொதுமக்களின் ரத்தம் சிந்தியததையும் கண்டுள்ளது. நாம் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.