Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஏலியன்கள் இருக்கா? இல்லையா? ஆதாரத்தை வெளியிட்ட விஞ்ஞானிகள்!

பூமிக்கு வெளியே வேறு கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான உறுதியான ஆதாரத்தை பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், பூமிக்கு அடுத்தபடியாக உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள கிரகமாக உள்ளது. இருப்பினும், இதுகுறித்து விரிவான ஆராய்ச்சி தேவைப்படுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த தகவலை அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

ஏலியன்கள் இருக்கா? இல்லையா? ஆதாரத்தை வெளியிட்ட விஞ்ஞானிகள்!
மாதிரிப்படம்Image Source: X
umabarkavi-k
Umabarkavi K | Published: 18 Apr 2025 12:14 PM

வேற்று கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியிலிருந்து 700 டிரில்லியன் மைல்கள் தொலைவில் அமைந்துள்ள K2-18b என்ற கோளிலில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்தக் கோள் பூமியை விட இரண்டரை மடங்கு பெரியது என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது. பூமிக்கு வெளியே வேறு கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆய்வுகளை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றன.

ஏலியன்கள் இருப்பது உறுதி

விஞ்ஞானிகள் பலரும் இதற்கான் ஆய்வுகளில் தீவிரமாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தான், பூமிக்கு வெளியே வேறு கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம் என உறுதியான தகவலை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு வெளியிட்டுள்ளது. இது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

அதாவது, அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கில் பதிவான தரவுகள் மூலம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சூரிய குடும்பத்திற்கு வெளியே ஒரு கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம் என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பூமியிலிருந்து எழுநூறு டிரில்லியன் மைல்கள் தொலைவில் அமைந்துள்ள K2-18b கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறுகின்றனர். K2-18b கிரகத்தில் டைமெத்தில் சல்பைடு (DMS) மற்றும் டைமெத்தில் டைசல்பைடு (DMDS) போன்ற வேதிப்பொருட்களைக் கண்டறிந்துள்ளனர்.

இவை பூமியில் பொதுவாக பைட்டோபிளாங்க்டன் மற்றும் பாக்டீரியா போன்ற உயிரினங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் மூலம், சூரிய குடும்பத்திற்கு வெளியே K2-18b என்ற கிரகத்தில் உயிரினங்கள் இருப்பது தெரிவதாக கூறுகின்றனர்.

ஆதாரத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

இருப்பினும், இந்த ஆதாரத்தை உறுதி செய்ய இன்னும் பல ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனனர். டிஎம்எஸ் மற்றும் டிஎம்டிஎஸ் ரசாயணங்கள் உயிரினங்கள் இல்லாத சில கிரகங்களில் கூட அந்த இரு பொருளை கண்டறியப்பட்டுள்ளதாகவும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எனவே,அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் K2-18b இல் உயிர்கள் இருப்பது சாத்தியம் என்பதை நிரூபிக்க முடியும் கூறுகின்றனர். அதே நேரத்தில், K2-18b என்ற கிரகத்தில் அம்மோனியாவை உறிஞ்சும் ஒரு பெரிய கடல் இருக்கலாம் கூறுகின்றனர்.   எனவே, 99.7 சதவீதம் K2-18b என்ற கிரகத்தில் உயிரினங்கள் உறுதியாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கியவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வானியல் நிறுவனத்தில் ஆய்வாளர் நிக்கு மதுசூதன். இவர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு இதனை கண்டுபிடித்துள்ளது. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். 1980 ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த இவர், பின்னர் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) முதுகலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜில் பேராசிரியராக இருந்தார். இவர் தற்போது கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகள் குழுவிற்கு தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்ரோ படத்தின் வசூலை முந்தியதா நானியின் ஹிட் 3?
ரெட்ரோ படத்தின் வசூலை முந்தியதா நானியின் ஹிட் 3?...
வெற்றிநடைப் போடும் டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் எப்போது?
வெற்றிநடைப் போடும் டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் எப்போது?...
சிறந்த கிரெடிட் கார்டுகளை தேர்ந்தெடுப்பது எப்படி?
சிறந்த கிரெடிட் கார்டுகளை தேர்ந்தெடுப்பது எப்படி?...
பல்கலை. தலைமைக் கழகங்களாக மாறாது என்பது என்ன நிச்சயம்? தமிழிசை
பல்கலை. தலைமைக் கழகங்களாக மாறாது என்பது என்ன நிச்சயம்? தமிழிசை...
வாழ்க்கையில் இந்த 5 பேரை எப்போதும் நம்பாதீர்கள்!
வாழ்க்கையில் இந்த 5 பேரை எப்போதும் நம்பாதீர்கள்!...
நடிகர் விஜய் உடனான கூட்டணி முறிந்ததற்கு காரணம் என்ன?
நடிகர் விஜய் உடனான கூட்டணி முறிந்ததற்கு காரணம் என்ன?...
சிறுத்தையுடன் கொஞ்சி விளையாடிய பெண் - வைரல் வீடியோ!
சிறுத்தையுடன் கொஞ்சி விளையாடிய பெண் - வைரல் வீடியோ!...
வெயிலுக்கு குட் பை.... இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும்...
வெயிலுக்கு குட் பை.... இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும்......
Skype செயலியை மூடிய மைக்ரோசாப்ட் - Alternatives இதோ!
Skype செயலியை மூடிய மைக்ரோசாப்ட் - Alternatives இதோ!...
பிளே ஆஃப் பந்தயத்தில் 8 அணிகள்! KKR-க்கு உள்ளே வர வாய்ப்புள்ளதா?
பிளே ஆஃப் பந்தயத்தில் 8 அணிகள்! KKR-க்கு உள்ளே வர வாய்ப்புள்ளதா?...
பிரபல நடிகர் கவுண்டமணியின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்
பிரபல நடிகர் கவுண்டமணியின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்...