’கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்’ எடப்பாடி பழனிசாமி உறுதி!
Ramanathapuram Edappadi Palanisamy Campaign : அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கச்சத்தீவை மீட்கவும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதனையொட்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமி 2025 ஜூலை 31ஆம் தேதியான நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கச்சத்தீவை மீட்கவும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்” எனக் கூறினார்.
Published on: Aug 01, 2025 02:28 PM
Latest Videos