Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
லாரா சாதனையை முறியடிக்காதது ஏன்..? வியான் முல்டர் விளக்கம்!

லாரா சாதனையை முறியடிக்காதது ஏன்..? வியான் முல்டர் விளக்கம்!

mukesh-kannan
Mukesh Kannan | Published: 07 Jul 2025 22:44 PM

தென்னாப்பிரிக்காவின் தற்காலிக கேப்டன் வியான் முல்டர், ஒரு இன்னிங்ஸில் 367 ரன்கள் குவித்து டெஸ்ட் போட்டிகளில் அதிக தனிநபர் ஸ்கோர் என்ற பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு கிடைத்தும் ஏன் அதை செய்யவில்லை என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர், முதலில் தென்னாப்பிரிக்கா போதுமான அளவு பந்து வீச வேண்டும் என்று நினைத்தேன்" என்றார்.

தென்னாப்பிரிக்காவின் தற்காலிக கேப்டன் வியான் முல்டர், ஒரு இன்னிங்ஸில் 367 ரன்கள் குவித்து டெஸ்ட் போட்டிகளில் அதிக தனிநபர் ஸ்கோர் என்ற பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு கிடைத்தும் ஏன் அதை செய்யவில்லை என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர், முதலில் தென்னாப்பிரிக்கா போதுமான அளவு பந்து வீச வேண்டும் என்று நினைத்தேன். இரண்டாவதாக, பிரையன் லாரா ஒரு ஜாம்பவான் அவர் இங்கிலாந்துக்கு எதிராக 401 ரன்கள் எடுத்தார். அந்த அந்தஸ்துள்ள ஒருவர் அந்த சாதனையை தக்கவைத்துக்கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட்டிடம் பேசியபோது, ​​அவர் என்னிடம், ஜாம்பவான்கள் உண்மையிலேயே பெரிய ஸ்கோர்களை வைத்திருக்கட்டும் என்று கூறினார். அதனால் பிரையன் லாரா அந்த சாதனையை சரியாக வைத்திருப்பதுதான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.