’தமிழ்நாட்டில் பெரியார் புராணம் பேசக் கூடாது’ தமிழிசை பேட்டி
Tamilisai Soundararajan : தமிழகத்தில் பெரியப் புராணம் தான் பேச வேண்டும். பெரியார் புராணம் அல்ல என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார். பிரதமர் மோடி தூத்துக்குடி வருகை தரும் நிலையில், அவரை வரவேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் தூத்துக்குடி செல்கிறார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் அவர் பேட்டி அளித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியார்களுக்கு பேட்டி அளித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “தமிழகத்தில் பெரிய புராணம் தான் இனி பேச வேண்டும். பெரியார் புராணம் அல்ல. ஏனென்றால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் நீர் மேலாண்மை இருந்திருக்கிறது, விவசாயம் இருந்திருக்கிறது. சோழ மன்னர்கள் ஆன்மீகத்தோடு செய்து தமிழை வளர்த்தார்கள். அதனால் தான் காவி தமிழ் அதிகம் வளர்க்கப்பட்டது என்று கூறினேன்” என்றார்.