”அருளை நீக்கும் அதிகாரம் எனக்கே”.. அன்புமணியை சீண்டிய ராமதாஸ்..!

| Jul 03, 2025 | 10:50 PM

பாமக உட்கட்சி விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பாமக நிறுவர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே அதிகார மோதல் நிலவி வருகிறது. இந்தநிலையில், கடந்த 2025 ஜூன் 30ம் தேதி ராமதாஸ் ஆதரவாளரான சேலம் மேற்கு பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை நீக்கி, அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டார். இந்தநிலையில், திண்டிவனத்தில் இன்று அதாவது 2025 ஜூலை 3ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “பாமக எம்.எல்.ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. அருளை நீக்க பாமக நிறுவனர் மற்றும் தலைவரான எனக்கே அதிகாரம் உள்ளது” என்று தெரிவித்தார்.

Published on: Jul 03, 2025 10:50 PM