வெகு விமர்சையாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி.. தொடங்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி

Jan 16, 2026 | 9:05 PM

தைத்திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக இன்று (ஜனவரி 16) காலை 9 மணி அளவில் தொடங்கியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இப்போட்டியை கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார். இதில் 1,000-க்கும் மேற்பட்ட காளைகளும், 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை ஆகும்.