திருச்சியில் மாரத்தான் போட்டி.. தொடங்கி வைத்த அமைச்சர் நேரு.. 7,000 பேர் பங்கேற்பு!
காவேரி மருத்துவமனை சார்பில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 5 கி.மீ. மாரத்தான் ஓட்டத்தை திருச்சி மாவட்டத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தானில், 7,000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாநகர மேயர் மு. அன்பழகன் அவர்கள், மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், காவல் ஆணையர் என். காமினி ஐ.பி.எஸ்., ஆகியோரும் பங்கேற்றனர்.
திருச்சி, அக்டோபர் 05 : காவேரி மருத்துவமனை சார்பில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 5 கி.மீ. மாரத்தான் ஓட்டத்தை திருச்சி மாவட்டத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகர மேயர் மு. அன்பழகன் அவர்கள், மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், காவல் ஆணையர் என். காமினி ஐ.பி.எஸ்., ஆகியோருடன் ஏராளமான விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் திரளாக பங்கேற்று புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த மாரத்தானில், 7,000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
Published on: Oct 05, 2025 01:35 PM