மத்திய அரசு நிறுத்தாத வரை நாங்களும்.. இந்தி திணிப்புக்கு எதிராக பேசிய கனிமொழி!

Jan 30, 2026 | 9:28 PM

சென்னையில் உள்ள பார்க் டவுன் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையங்களில் புதிய பெயர் பலகைகள் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி மத்திய அரசு மீது ஒரு புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “மத்திய அரசு இந்தியைத் திணிப்பதை நிறுத்தாத வரை, நாங்கள் எதிர்ப்பதை நிறுத்த மாட்டோம். பெயர் பலகைகளில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளும் இடம்பெற்றிருந்தாலும், எழுத்துருக்களின் இடம் மாற்றப்பட்டதை ஒரு திட்டமிட்ட 'இந்தி திணிப்பு' தான்” என்றார்.

சென்னையில் உள்ள பார்க் டவுன் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையங்களில் புதிய பெயர் பலகைகள் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி மத்திய அரசு மீது ஒரு புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “மத்திய அரசு இந்தியைத் திணிப்பதை நிறுத்தாத வரை, நாங்கள் எதிர்ப்பதை நிறுத்த மாட்டோம். பெயர் பலகைகளில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளும் இடம்பெற்றிருந்தாலும், எழுத்துருக்களின் இடம் மாற்றப்பட்டதை ஒரு திட்டமிட்ட ‘இந்தி திணிப்பு’ தான்” என்றார்.