பட்டாசு ஆலையில் தீ விபத்து.. ஒருவர் பலி.. சாத்தூர் அருகே பரபரப்பு
குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இங்கிருந்து உள்ளூர் முதல் உலகம் வரை பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு வருவதால் வருடம் 365 நாட்களும் வேலை இருக்கும். இப்படியான நிலையில் சாத்தூர் அருகே உள்ள கீழ தாயில்பட்டியில் செயல்படும் பட்டாசு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியான நிலையில் 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.