Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இடஒதுக்கீடு கோரிக்கை.. 72 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய கவிதா!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 04 Aug 2025 15:28 PM

தெலங்கானா ஜக்ருதி தொண்டு நிறுவனத்தின் தலைவரும், சட்டப்பேரவை மேலவை உறுப்பினரும், பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் மூத்த தலைவருமான கவிதா, ஹைதராபாத்தில் உள்ள இந்திரா பூங்கா அருகே உள்ள தர்ணா சவுக்கில் இன்று (ஆகஸ்ட் 4) 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். தெலங்கானா மாநிலத்தில் வாழும் பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களுக்கு 42% இடஒதுக்கீடு கோரி இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. சுமார் 112 பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களில் 40 சமூகங்கள் தங்கள் பிரச்சினைகளை முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் இந்தப் போராட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: Aug 04, 2025 03:28 PM