நீலகிரியில் கொட்டிய மழை.. மகிழ்ச்சியில் மக்கள்..
தமிழகத்தில் கோடை வெயில் உச்சத்தில் இருந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸை கடந்த வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்த சூழலில், ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 6ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஊட்டியில் பல்வேறு பகுதிகளில் இன்று நல்ல மழை பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Follow Us