சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்..
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல திரண்டுள்ளனர். ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கமாக உள்ளது. சித்ரா பௌர்ணமி மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுவதால், பக்தர்கள் இந்த நாளில் கிரிவலம் சென்று சிவபெருமானை தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி திருவண்ணாமலை சென்றடைய சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கிரிவலப் பாதை முழுவதும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

Follow Us