Viral Video : குதிரையைத் துரத்திய நாய்.. குதிரை செய்த விஷயம்.. அந்த வீடியோவைப் பாருங்கள்!
Dog Attacks Horse : சமீபத்தில் இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்று, சாலையில் சென்று கொண்டிருந்த குதிரையை பிட்புல் ரக நாய் ஆக்ரோஷமாகத் துரத்தும் காட்சியைக் காட்டுகிறது. பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இந்த நாய்களின் ஆபத்துகளை இந்த வீடியோ எடுத்துக்காட்டுகிறது. குதிரை காரின் மீது குதித்து தப்பித்தது. இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போதுள்ள காலத்தில் பல வீடுகளில் செல்லப்பிராணிகளாக நாய்கள், பூனைகள் (Dogs, cats) போன்றவை வளர்க்கப்படுகின்றன. பூனைகள் பொதுவாகச் சாதுவானதாக இருக்கும், இது குறித்த பெரிய பிரச்னைகள் எதுவும் வராது. ஆனால் செல்லப்பிராணியாக (pets) வளர்க்கப்படும் நாய்கள், அவற்றின் உரிமையாளர்களைத் தவிர மற்ற யாராக இருந்தாலும் சரி மிகவும் ஆக்ரோஷமாக தக்க முயலும். இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் வெளியான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாதாரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த, இரு குதிரைகளில் ஒரு குதிரையை (Horse), பிட்புல் ரக நாய் (Pitbull) ஒன்று வெறிகொண்டு துரத்திய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சாதாரணமாகவே இதுபோன்ற பிட்புல் ரக நாய்களை வளர்ப்பதற்குப் பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் இதுபோன்ற நாய்களை வளர்ப்பதற்கு உரிமை தேவைப்படுகிறது. அந்த விதத்தில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவமானது இந்தியாவில் எந்த இடத்தில் நடந்துள்ளது என்பது தெரியவில்லை. சாலையில் இரு குதிரைகள் நடந்து செல்கின்றன. இதைப் பார்த்த பிட்புல் நாய் ஒன்று, திறந்திருந்த வீட்டிலிருந்து பாய்ந்து குதிரையை நோக்கித் தாக்க வந்தது. பின் அந்த குதிரையானது அதனிடம் இருந்து தப்பிப்பதற்குக் காரின் பின் மறைந்து கொள்கிறது. பின் அந்த நாய் செய்த விஷயத்தை நீங்களே பார்த்தது தெரிந்து கொள்ளுங்கள்.
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ :
Kalesh b/w Dogesh and Ghodesh: pic.twitter.com/9FKLdzmuCN
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 23, 2025
இந்த வீடியோவில், ஒரு வீட்டின் கதவு திறந்திருக்கிறது, அதிலிருந்து ஒரு பிட்புல் நாய் ஓடி வந்தது. அது அந்தக் குதிரைகளில் ஒன்றைப் பின்தொடர்ந்து தாக்குவதற்கு ஓடுகிறது. குதிரை பயந்து, கட்டுப்பாட்டை இழந்து வேகமாக ஓடத் தொடங்குகிறது. நாய் குதிரையை மிக வேகமாகத் துரத்தியதால், குதிரை தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அதன் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது குதித்தது. ஆனாலும் நாய் குதிரையை விட்டு விலகவில்லை. ஒரு காருக்கு முன்னால் இருந்த குதிரையைத் தாக்க ஒரு பிட்புல் முயன்றது.
அதனுடன், குதிரை திரும்பியது. இரண்டுக்கும் இடையே கடுமையான போராட்டம் நடந்தது என்றே கூறலாம். இந்த சம்பவம் முழுவதும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதன் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரல் காணொளி @gharkekalesh என்ற எக்ஸ் பயனர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலரும் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
வீடியோவின் கீழ் நெட்டிசன்களின் கருத்துக்கள் :
இந்த வீடியோவின் கீழ் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்தது வருகின்றனர். அதில் சிலவற்றைப் பற்றிப் பார்க்கலாம். இதில் முதல் பயனர் ஒருவர், “அந்த பிட்புல் நாய் ஏற்கனவே ஆக்ரோஷமானது, ஆனால் இந்த குதிரை அதனிடம் சிக்கி எப்படியோ தப்பித்தது” என்று கூறியுள்ளார். இரண்டாவது பயனர் ஒருவர் “நல்லவேளை அந்த நாய் குதிரையைப் பெரிதாக எதுவும் செய்யவில்லை, அந்த குதிரைக் கார் மீது குதித்தது பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது” என்று கூறியுள்ளார்.