Viral Video : ராட்சத மலைப்பாம்புடன் Chill செய்யும் சிறுமி.. ஆச்சர்யத்தில் வாய் பிளக்கும் இணைய வாசிகள்!
Girl Plays Fearlessly with Giant Snake | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், குழந்தை ஒன்று ராட்சத மலைப்பாம்புக்கு அருகில் பயமின்றி விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழி உள்ளது. அது 100 சதவீதம் உண்மை. காரணம் மனிதர்கள் பாம்பை கண்டால் தலை தெறிக்க ஓடி விடுவார்கள். பாம்பு அதிக விஷ தன்மை கொண்டிருப்பதால் அது கடித்த ஒரு சில நிமிடங்களிலேயே உயிர் போய்விடும் அபாயம் உள்ளது. இதன் காரணமாகவே பாம்புகளை கண்டால் மனிதர்கள் அச்சமடைந்துவிடுவார்கள். பெரியவரகளுக்கு இந்த நிலை என்றால் சிறு குழந்தைகளுக்கு சொல்லவா வேண்டும். ஆனால், இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஒரு குழந்தை ஒன்று ராட்சத மலைப்பாம்பு அருகில் எந்த வித பயமும், தயக்கமும் இன்றி சகஜமாக அமர்ந்து விளையாடிக்கொண்டு இருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
ராட்சத மலைப்பாம்புடன் அமர்ந்து விளையாடிய சிறுமி
பாம்புகள் கொடிய விஷம் கொண்டவை என்பதால் அவற்றை பார்த்தாலே பலருக்கும் பயம் வந்துவிடும். சிறிய வகை பாம்புக்கே இந்த நிலை என்றால் பெரிய வகை பாம்புகள் குறித்து சொல்லவே வேண்டாம். பெரிய தோற்றம் கொண்ட ராட்சத மலைப்பாம்புகள் ஒரு மனிதரையே விழுங்கும் தன்மை கொண்டிருக்கும். இதனால், அத்தகைய பாம்புகளின் அருகில் இருப்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். இதன் காரணமாக அத்தகைய ராட்சத மலைப்பாம்புகளின் பக்கம் கூட நெருங்க யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால், சிறுமி ஒருவர் ராட்சத மலைப்பாம்பு அருகில் அமர்ந்துக்கொண்டு துளியும் பயமின்றி விளையாடிக்கொண்டு இருக்கிறார். இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் வீட்டின் வெளியே ராட்சத மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்கிறது. அதற்கு அருகில் ஒரு சிறுமி அமர்ந்துக்கொண்டு இருக்கிறார். அவர் அந்த மலைப்பாம்பை பார்த்து பயப்படவோ, அழவோ செய்யவில்லை. மாறாக அவர் பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார். அவரது முகத்தில் தன் அருகே மிகப்பெரிய மலைப்பாம்பு ஊர்ந்து செல்கிறது என்ற அச்சமோ, கவலையோ எதுவும் இல்லை. மிகவும் இயல்பாக அவர் அமர்ந்துக்கொண்டு இருக்கிறார்.
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து கூறியுள்ள ஒருவர், அந்த சிறுமியும், பாம்பும் மிகச்சிறிய நண்பர்கள் போல என்று பதிவிட்டுள்ளார். மிகவும் தைரியமான பெண் அந்த சிறுமி என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். மேலும், சிலர் பாம்பின் கொடிய குணம் வேட்டை ஆடுவது. அதற்கு பசி வந்துவிட்டால் அன்பு கண்ணுக்கு தெரியாது. இத்தகைய ஆபத்தான செயல்களை செய்ய வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.