Viral Video : விமானத்தில் மறைந்திருந்த பாம்பு.. புறப்படுவதற்கு முன்பு பதற்றம்!
Snake on a Plane Viral Video | ஆஸ்திரேலியா சதுப்பு நில பகுதி என்பதால் அங்கு எப்போதும் பாம்புகளின் நடமாட்டம் அதிக அளவு காணப்படும். அந்த வகையில், மெல்போர்னில் இருந்து பிரிஸ்போன் செல்ல புறப்பட தயார விமானத்தில் பாம்பு இருந்தது பயணிகள் மற்றும் விமான குழுவை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

வைரல் வீடியோ
மெல்போர்னில் இருந்து பிரிஸ்போன் (Melbourne to Brisbane) சென்ற விமானத்தில் பாம்பு இருந்ததால் இரண்டு மணி நேரம் விமானம் தாமதமானது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் பலரும் அது குறுத்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். விமானத்தின் கார்கோவில் பாம்பு இருந்த நிலையில், அதனை கண்டு அதிர்ச்சியடைந்த விமான ஊழியர்கள் உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை மேற்கொண்டு பயணிகளுக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படுத்தாமல் பாதுகாத்துள்ளனர்.
விமானத்தில் இருந்த பாம்பு – பதறிப்போன விமான குழு
ஆஸ்திரேலியா ஒரு சதுப்பு நில பகுதி என்பதால் அங்கு பாம்புகளின் நடமாட்டம் மிக அதிகமாக இருக்கும். பெரிய வகை பைத்தான்கள் முதல் சிறிய வகை மற்றும் அதிக விஷம் கொண்ட பாம்புகள் என அனைத்து பாம்புகளின் சரணாலயமாகவே ஆஸ்திரேலியா விளங்குகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து பிரிஸ்போன் பகுதிக்கு சென்ற விமானத்தில் பாம்பு இருந்த சம்பவம் விமான குழுவை மட்டுமன்றி, பயணிகளையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் பாம்பின் வீடியோ
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் பாம்பு ஒன்று விமானத்தின் கார்கோவில் மறைந்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், அந்த இடத்திற்கு வந்த பாம்பு ஆர்வலர் ஒருவர் அதனை அங்கிருந்து பிடிக்கிறார். பின்னர் அங்கிருந்தவரின் உதவியுடன் அதனை ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் போட்டு அடைக்கிறார். இதற்கிடையே பாம்பு மிக வேகமாக துள்ளுகிறது. ஆனால், அந்த நபரோ பிடியை விடாமல் இருக்கமாக பிடித்துக்கொண்டு இருக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். புளோரிடாவில் இத்தகைய நிகழ்வுகள் மிகவும் சாதாரணம் என்று ஒருவர் கூறியுள்ளார். மிகவும் துணிச்சலுடன் பாம்பை பிடித்த நபருக்கு ஒருவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இவ்வாறு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.