Viral Video : பாகிஸ்தானில் கொண்டாடப்பட்ட நவராத்திரி.. இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீடியோ!
Pakistan Navratri Viral Video | இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானில் நவராத்திரி கொண்டாடப்படுவது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

வைரல் வீடியோ
இந்தியாவில் தற்போது நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி பண்டிகை மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பான வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால், மிகவும் ஆச்சர்யமூட்டும், நவராத்திரி கொண்டாட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாகிஸ்தானில் கொண்டாடப்பட்ட நவராத்திரி பண்டிகை?
இந்தியாவில் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மொத்தம் 9 நாட்களுக்கான இந்த கொண்டாட்டத்தில் பொதுமக்கள் கொளு வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவர். அதாவது அந்த 9 நாட்களுக்கும் கொண்டாட்டங்கள் நடைபெறும். இந்தியாவில் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், பாகிஸ்தானில் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவது போன்ற வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Viral Video : வெறும் ரூ.50-க்கு மருத்துவம்.. இந்தியாவின் மருத்துவ வசதி குறித்து வியந்து வீடியோ பதிவிட்ட வெளிநாட்டு பெண்!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் பேசுகிறார். அவர் பாகிஸ்தானில் நவராத்திரி கொண்டாட்டம் நடைபெறுவதாகவும், அதனை காட்ட விரும்புவதாகவும் கூறுகிறார். அவர் கூறியது போலவே சுவர்களால் அமைக்கப்பட்ட ஒரு இடத்தில் ஏராளமான மக்கள் நவராத்திரி கொண்டாடுகிறார்கள். குறிப்பாக சிறுமிகள், பெண்கள் என பலரும் இணைந்து நவராத்தியின் பாரம்பரிய நடனமான கர்பா நடனத்தை ஆடுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : உங்கள் ரூ.132 என்னை பணக்காரனாக மாற்றாது.. பயணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கேப் டிரைவர்!
வைரல் வீடியோவுக்கு நெட்டிச்னகள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறதா என பலரும் வியந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.