Viral Video : எது ரயிலில் பீட்சா கிடைக்குமா?.. இந்தியாவின் உணவு டெலிவரி சேவையை கண்டு அசந்த வெளிநாட்டவர்கள்!

Foreigners Shared Indian Food Delivery Experience | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மற்றும் வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இந்தியாவில் ரயிலில் பயணிக்கும் வெளிநாட்டவர்கள் சிலர், ரயிலில் உணவு டெலிவரி செய்யப்பட்டது குறித்து பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Viral Video : எது ரயிலில் பீட்சா கிடைக்குமா?.. இந்தியாவின் உணவு டெலிவரி சேவையை கண்டு அசந்த வெளிநாட்டவர்கள்!

வைரல் வீடியோ

Published: 

09 Jun 2025 19:18 PM

 IST

இந்தியாவில் உணவு டெலிவரி மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இக்கட்டான பணி சூழல், நேர பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களுக்காக பெரும்பாலான பொதுமக்கள் உணவு டெலிவரி சேவைகள் மூலம் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். அந்த வகையில், ரயிலில் பீட்சா டெலிவரி செய்யப்பட்டதை வெளிநாட்டவர் ஒருவர் மிகவும் வியந்து வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அவரின் அந்த வீடியோ தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் மிக விரைவில் டெலிவரி செய்யப்படும் உணவுகள்

இந்தியாவில் ஸ்விக்கி (Swiggy), சொன்மேட்டோ (Zomato) உள்ளிட்ட உணவு டெலிவரி சேவைகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றை பயன்படுத்தி ஏராளமான மக்கள் நாள்தோறும் உணவு பொருட்களை ஆர்டர் செய்கின்றனர். குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் முதல் அதிகபட்சமாக 40 நிமிடங்களுக்குள் இந்த உணவுகள் டெலிவரி செய்யப்படுவதால், இது பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ள சேவையாக உள்ளது.

இதன் காரணமாக வீடுகளில் இருக்கும் பொதுமக்கள், அலுவலங்களில் இருக்கும் நபர்கள் மற்றும் நண்பர்களுடன் வெளியில் இருக்கும்போதும் கூட பலர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். வீடு, அலுவலகங்கள் மட்டுமன்றி ரயில்களிலும் உணவு டெலிவரி செய்யப்படுகிறது. ரயிலில் பயணம் செய்யும்போது அடுத்த நிறுத்தத்தை குறிப்பிட்டு ஆர்டர் செய்யும் பட்சத்தில் உணவு டெலிவரி ஊழியர்கள் அந்த ரயில் நிறுத்தத்திற்கு வந்து உணவு டெலிவரி செய்து விடுவர்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் பேசியுள்ள வெளிநாட்டவர் ஒருவர், நாங்கள் இந்தியாவில் ரயிலில் பயணம் செய்துக்கொண்டு இருந்தோம். அப்போது பீட்சா சாப்பிட வேண்டும் என தோன்றியது. இதன் காரணமாக டோமினோஸுக்கு கால் செய்து ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்தோம். நாங்கள் அடுத்த ரயில் நிறுத்தத்திற்கு செல்லும்போது அங்கு டாமினோஸ் உணவு டெலிவரி ஊழியர் பீட்சாக்களுடன் எங்களுக்காக காத்திருந்தார் என அவர் கூறியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் உண்மையான முகம் இதுதான் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்தியா குறித்த நல்ல விஷயத்தை பகிர்ந்ததற்காக மிக்க நன்றி என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.