இரவெல்லாம் ஏசி ஓடினாலும் EB பில் கம்மியா வரணுமா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
Tips to Reduce Energy Bills and Prevent Breakdowns | கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பெரும்பாலான நபர்கள் ஏசியை அதிகம் பயன்படுத்துவர். இவ்வாறு அதிக நேரம் ஏசி பயன்படுத்துவதால் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
பொதுவாக கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும். இதன் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் வெளியில் செல்லாமல் வீடுகளுக்குள்ளே இருப்பர். ஆனால், வீடுகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் வெப்பத்தை தணிக்க ஏதுவான செயல்களை செய்கின்றனர். குறிப்பாக வெப்பமான சூழலை போக்க பெரும்பாலான வீடுகளில் ஏசி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வெளியிலின் தாக்கத்தில் இருந்து, வீடுகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. கோடையில் ஏசி குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தினாலும் அதில் சில சிக்கல்கள் உள்ளன. அதாவது கோடையின் போது அதிக நேரம் ஏசி பயன்படுத்துவதால் மின்சார கட்டணம் உயர்வு, ஏசி வெடிப்பு உள்ளிட்டவை நிகழ்வதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், அவற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏசியை பாதுகாப்பாக பயன்படுத்துங்கள்
ஏசியை பயன்படுத்துவது எவ்வளவு அவசியமாக உள்ளதோ அதே அளவுக்கு ஏசியை பராமறிப்பது முக்கியமாக உள்ளது. இந்த நிலையில், ஏசியை அதிகம் பயன்படுத்துவது அதன் செயல்திறனை வெகுவாக பாதிக்கும். எனவே கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே உங்கள் ஏசியை சர்வீஸ் செய்வது பாதுகாப்பானதாக இருக்கும். உங்கள் ஏசியில் ஃபில்டர் அசுத்தமாக இருந்தாலோ அல்லது ஏசியில் காயில் பிரச்னைகள் இருந்தாலோ அது, ஏசி வெடிக்கும் அளவுக்கு ஆபத்தை உருவாக்கிவிடும். எனவே ஏசியின் நிலையை அவ்வப்போது சோதிப்பது இந்த ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும்.
ஏசியை குறைவான வெப்பநிலையில் வைத்து பயன்படுத்த கூடாது
பெரும்பாலான நபர்கள் அதிக குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஏசியை 18 டிகிடியில் வைத்து பயன்படுத்துவர். இது ஏசியை குளிராக்குவது மட்டுமன்றி, உங்களது மின்சார கட்டணத்தை பலமடங்கு அதிகரித்துவிடும். ஏசியை பொருத்தவரை 24 டிகிரியே போதுமானது என வல்லுநர்கள் கூறுகின்றனர். அதற்கும் குறைவான அளவில் வைத்து பயன்படுத்தினால் ஏசியின் திறன் அதிகம் பயன்படுத்தப்படும். இதன் மூலம் மின்சார கட்டணம் உயரும்.
டைமர் மற்றும் ஸ்லீப் மோட்
பெரும்பாலான நபர்கள் ஏசியை பயன்படுத்தும்போது அதனை ஆஃப் செய்ய மறந்துவிடுவர். இதன் காரணமாக முழு நேரமும் ஏசி ஓடிக்கொண்டே இருக்கும். இந்த நிலையில், தான் ஏசியில் உள்ள சில சிறப்பு அம்சங்களை பயன்படுத்து புத்திசாலிதனமாக கருதப்படுகிறது. அதாவது, ஏசியில் டைமர் மற்றும் ஸ்லீப் மோடு என இரண்டு இருக்கும். அதில் டைமர் செட் செய்யும் போது எவ்வளவு நேரம் ஏசி ஓட வேண்டும் என்பதை நீங்கள் முன்கூட்டியே செட் செய்து விடலாம். இதேபோல ஸ்லீப் மோடை பயனபடுத்தும் பட்சத்தில் நீங்கள் தூங்கிய பிறகு 6 முதல் 8 மணி நேரத்திற்கு பிறகு ஏசி தானாகவே ஆஃப் ஆகிவிடும்.
மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஏசி பயன்படுத்துவதால் வரும் அதிக கட்டணம் மற்றும் அதிக வெப்பத்தால் ஏற்படும் வெடிப்பு உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.