உங்கள் ஸ்மார்ட்போனில் அடிக்கடி ஸ்டோரேஜ் சிக்கலை சந்திக்கிறீர்களா?.. அப்போ இத பண்ணுங்க!
How to Free Up Smartphone Storage | ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் அதில் ஸ்டோரேஜ் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்த ஸ்டோரேஜ் சிக்கல் சில சமயங்களில் ஸ்மார்ட்போன்களின் செயல்திறனை குறைத்து அதனை பயன்படுத்த முடியாமல் செய்துவிடும். இந்த நிலையில், ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜை சீராக பராமரிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக ஸ்மார்ட்போன்களை (Smartphone) பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன்கள் பல நேரங்களில் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும் நிலையில், ஸ்டோரேஜ் சிக்கல் (Storage Issues) ஏற்படும்போது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். இந்த நிலையில், ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜை முறையாக பராமரிப்பதன் மூலம் தடையின்றி ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ்
ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் ஒவ்வொரு அளவிலான ஸ்டோரேஜ் கொண்டிருக்கும். ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இது வேறுபடும். பொதுமக்கள் ஸ்மார்ட்போன்களை வாங்கும்போது ஸ்டோரேஜ் தங்களுக்கு போதுமானதாக இருக்குமா என்பதை சோதனை செய்து வாங்க வேண்டும். இல்லையென்றால் பிற்காலத்தில் ஸ்டோரேஜ் சிக்கல்களால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பது சற்று கடினமானதாக இருக்கும். ஸ்டோரே அளவை தாண்டி ஸ்மார்ட்போனை முறையாக பராமரிப்பது ஸ்டோரேஜ் சிக்கல்களை சரிசெய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தேவையற்ற செயலிகள் மற்றும் ஃபைல்கள்
நாம் ஸ்மார்ட்போனில் அதிகப்படியான செயலிகள் மற்றும் ஃபைல்களை வைத்திருப்போம். ஒருசில செயலிகள் மற்றும் ஃபைல்கள் தான் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், எப்போதும் பயன்படுத்த கூடியதாகவும் இருக்கும். இந்த நிலையில், ஏதேனும் ஒருமுறை பயன்படுத்துவதற்காக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் மற்றும் ஃபைல்கள் ஸ்மார்ட்போன்களில் அப்படியே தங்கிடும். அவற்றை காலப்போக்கில் நாமும் மறந்துவிடுவோம். இந்த சூழலில் அவை, ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜை ஆக்கிரமிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே அவ்வப்போது தேவையற்ற செயலிகள் மற்றும் ஃபைல்களை டெலிட் செய்வது சிறந்ததாக இருக்கும்.
டேட்டா மற்றும் கேட்ச் ஃபைல்ஸ்
ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் செயலிகளில் டேட்டா மற்றும் கேட்ச் சேமிக்கப்படும். இது ஸ்டோரேஜில் மிகப்பெரிய இடத்தை பிடித்துக்கொண்டு, ஸ்மார்ட்போனின் செயல்திறனில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நிலையில், செயலிகளில் பிடித்தம் செய்யப்படும் கேட்ச் மற்றும் தேவையற்ற டேட்டாக்களை அவ்வப்போது சுத்தம் செய்வது ஸ்மார்ட்போனில் தேவையற்ற ஸ்டோரேஜ் நிரப்பத்திற்கு வழிவகுக்காது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்
செயலிகளை தாண்டி ஸ்மார்ட்போனில் அதிக ஸ்டோரேஜ் பிடிக்கும் அம்சமாக உள்ளது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான். சில சமயங்களில் செயலிகளுக்கு இணையாக அவை ஸ்டோரேஜ் பிடித்தம் செய்யும். இந்த நிலையில், தேவையற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது கிளியர் செய்யும் பட்சத்தில் ஸ்டோரேஜ் சிக்கல் வராது.
மேற்குறிப்பிட்ட இந்த மூன்று டிப்ஸ்களை பின்பற்றும் பட்சத்தில் ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜ் குறித்த சிக்கல்கள் வராது என்பது குறிப்பிடத்தக்கது.