ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் செய்யக்கூடாத தவறுகள்! | TV9 Tamil News

ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் செய்யக்கூடாத தவறுகள்!

Published: 

04 Apr 2026 18:18 PM

 IST

Common Mistakes For Repairing Wet Smartphone | ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்ததும் அதனை எப்படியாவது சரிசெய்துவிட வேண்டும் என்று பலரும் பல விதமான செயல்களை செய்வர். இந்த நிலையில், ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் இந்த செயல்களை செய்வது ஸ்மார்ட்போனுக்கே ஆபத்தாக மாறிவிடும்.

1 / 5ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் விழுந்தால் வேலை செய்ய முடியாமல் போகும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் விழுந்தால் உடனே அவற்றை எப்படியாவது சரி செய்துவிட வேண்டும் என பலரும் சில தவறான செயல்களை செய்வர். இந்த நிலையில், ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் செய்ய கூடாத விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். 

ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் விழுந்தால் வேலை செய்ய முடியாமல் போகும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் விழுந்தால் உடனே அவற்றை எப்படியாவது சரி செய்துவிட வேண்டும் என பலரும் சில தவறான செயல்களை செய்வர். இந்த நிலையில், ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் செய்ய கூடாத விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். 

2 / 5

ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்த உடனேயே அது செயல்படுகிறா என்பதை சோதிக்க பலரும் உடனே பவர் பட்டனை ஆன் செய்ய முயல்வர். அவ்வாறு செய்வதன் மூலம் ஸ்மார்ட்போனுக்குள் ஷார்ட் சர்கியூட் ஆகி, மதர்போர்டு முழுமையாக எரிந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

3 / 5

பலரும் ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்ததும், தண்ணீர் உள்ளே சென்றுவிடாமல் இருக்க குலுக்கி வெளியே எடுத்துவிடலாம் என முயற்சி செய்வர். ஆனால், அவ்வாறு செய்வதன் மூலம் தண்ணீர் மிக எளிதாக மதர்போர்டுக்கு சென்று ஸ்மார்ட்போன் முற்றிலும் செயலற்று போகும் வாய்ப்பு உள்ளது. 

4 / 5

சிலர் ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்ததும் தண்ணீரை காய வைக்க தலை முடியை காய வைக்கும் ஹேர் ட்ரையரை கொண்டு காய வைப்பர். ஆனால், அவ்வாறு செய்வதன் மூலம் ஸ்மார்ட்போனின் உள்ளே இருக்கும் சில முக்கிய மற்றும் சிறிய சிறிய எலக்ட்ரானிக் பாகங்கள் முற்றிலும் உருகும் வாய்ப்பு உள்ளது. 

5 / 5

ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் அதனை உடனே அரிசி டப்பாவிற்குள் வைப்பது பலரது பழக்கமாக உள்ளது. ஆனால், அவ்வாறு செய்வது ஸ்மார்ட்போனுக்கு ஆபத்தாக மாறிவிடும். அதாவது, ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா, ஸ்பீக்கர் உள்ளிட்ட துளைகளில் அரிசி மற்றும் தூசி சிக்கிக்கொண்டு நிரந்தர சிக்கலை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. 

Follow Us