கூமாப்பட்டி இளைஞர் வேண்டுகோள்.. ரூ.10 கோடியில் மெகா மாற்றம்.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு

Koomapatti Village : விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டியில் உள்ள பிளவக்கல் அணை பூங்காவை மேம்படுத்த வேண்டும் என இளைஞர் கோரிக்கை வைத்த நிலையில், ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, ரூ.10 கோடி மதிப்பில் பிளவக்கல் அணை பூங்கா மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என ஆட்சியர் சுகபுத்ரா அறிவித்துள்ளார்.

கூமாப்பட்டி இளைஞர் வேண்டுகோள்.. ரூ.10 கோடியில் மெகா மாற்றம்.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கூமாப்பட்டி கிராமம்

Updated On: 

27 Jun 2025 20:23 PM

 IST

விருதுநகர், ஜூன் 27 : விருதுநகர் மாவட்டத்தில் பிளவுக்கல் பெரியாறு அணையில் ரூ.10 கோடி மதிப்பில் பூங்கா மேம்பாட்டு நடைபெறும் எனவும் அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் விருதுநகர் ஆட்சியர் சுகபுத்ரா (Virudhunagar Collector Sukhaputra) அறிவித்துள்ளார். கூமாப்பட்டி கிராமத்தை (Koomapatti Village) சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த சில தினங்களாகவே இன்ஸ்டாகிராமில் டிரண்டிங்கில் இருந்து வருவது கூமாப்பட்டி என்ற கிராமம் தான். இந்த கூமாப்பட்டி கிராமம் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ளது. பிளவக்கல், கோவிலாறு அணைகளுக்கு அருகே இயற்கை சூழப்பட்ட பரபரப்பளவில் கூமாப்பட்டி கிராமம் அமைந்துள்ளது.

கூமாப்பட்டி கிராமம்

இந்த கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் கூமாப்பட்டி கிராமம் பற்றி பதிவிட்டு இருந்தார். அதாவது, மன அழுத்தமா? விடுமுறை கொண்டாட வேண்டுமா? கூமாப்பட்டிக்கு வாங்க எனவும் கூமாப்பட்டி தனித் தீவு, குளிங்க என வீடியோவில் தெரிவித்திருந்தார்.

அதோடு, கூமாப்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள இயற்கை அழகை அவர் வீடியோவில் காண்பிடித்தார். இது பார்ப்போரை பெரிதும் கவர்ந்தது. அதோடு, கூமாப்பட்டி கிராமத்திற்கு பலரும் தற்போது படையெடுக்க தொடங்கி உள்ளனர். ஆனால் கூமாப்படி கிராமம் மழைக்காலத்தில் அழகாக இருக்கும் என்பது தெரியவந்தது.

இளைஞர் வைத்த கோரிக்கை 

இதற்கிடையில், பொதுப்பணித்துறையும் வீடியோவை நம்பி கூமாப்பட்டி மக்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தது. இதனை அடுத்து,  அந்த வீடியோவை வெளியிட்ட இளைஞர் தமிழக அரசுக்கும், விருநகர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்தார். கூமாப்பட்டி கிராமத்தை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார். மேலும், பிளவக்கல் அணை மற்றும் பூங்காவை நவீன முறையில் மேம்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.  மேலும், பிளவக்கல் அணை மேம்பாட்டு திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.10 கோடி ஒதுக்கியதாகவும், அந்த பணி நிலுவையில் இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

விருதுநகர் ஆட்சியர் அறிவிப்பு

இந்த நிலையில், விருதுநகர் ஆட்சியர் சுகபுத்ரா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, பிளவக்கல் அணையில் ரூ.10 கோடி மதிப்பில் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்குவதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் நிதி பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும் என்றுவும் விருதுநர் ஆட்சியர் அறிவித்துள்ளார். இதன் மூலம் விரைவில் பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாடு பணிகள் தொடங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.