Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தேமுதிக இளைஞரணி செயலாளரானார் விஜய பிரபாகரன்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Vijaya Prabhakaran DMDK : தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். 2025 ஏப்ரல் 30ஆம் தேதியான இன்று செயற்குழு கூட்டம் நடக்க உள்ள நிலையில், அக்கட்சி பொதுச் செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தேமுதிக இளைஞரணி செயலாளரானார் விஜய பிரபாகரன்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய பிரபாகரன்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 Apr 2025 11:45 AM

சென்னை, ஏப்ரல் 30 : தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் (தேமுதிக) இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை அக்கட்சியன் பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ளார்.  மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் தலைவர்  விஜயகாந்தின் மகன்  விஜய பிரபாகரன். இவர் கட்சியில் உறுப்பினராக மட்டுமே இருந்த நிலையில், தற்போது அவருக்கு  கட்சியில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து,  தேசிய முற்போக்கு திராவிட கழக  கட்சியின் பொருளாளராக  பிரேமலதாவின் சகோதரர்  எல்.கே.சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேமுதிக இளைஞரணி செயலாளரானார் விஜய பிரபாகரன்

மேலும், கழக அவைத் தலைவராக இளங்கோவன், கழக தலைமை நிலையச் செயலாளராக பார்த்தசாரதி, கழக கொள்கை பரப்பு செயலாளராக அழகாபுரம், மோகன்ராஜ், கழக துணைச் செயலாளராக எம்.ஆர்.பன்னீர்செல்வம், சந்திரன், செந்தில் குமார், சுபர ரவி ஆகியோரை நியமித்து பொதுச் செயலாளர் பிரேமலா விஜயகாந்த் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு, பொதுக் குழு கூட்டம் 2025 ஏப்ரல் 30ஆம் தேதியான இன்று நடைபெறுகிறது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு 2000க்கும் மேற்பட்டே உறுப்பினர்கள் வருகை தருவார்கள் என கூறப்படுகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு, முதல்முறையாக அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. தேமுதிகவின் 19 வது பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அதில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு தேமுதிக மாநில இளைஞரணிச் செயலாளர் பதவி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு


இந்த நிலையில், தற்போது அது உறுதியாகி உள்ளது. அதன்படி, இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக, தேமுதிகவின் கட்சி உறுப்பினராக மட்டுமே விஜய பிரபாகரன் செயல்பட்டு வந்தார். கடந்த 2024 லேக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில்  போட்டியிட்டு விஜய பிரபாகரன் தோல்வியை சந்தித்தார். இந்த நிலையில், விஜய பிரபாகரனுக்கு கட்சியின் இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தருமபுரியில் நடக்கும் பொதுக்குழு செயற்குழுவில் நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு எடுத்துள்ளனர். இதுகுறித்து பேசிய பொதுக் செயலாளர் பிரேமலதா, “தொண்டர்களின் எதிர்பார்ப்பை அடுத்து, இளைஞரணி பதவி விஜய பிரபாகரனுக்கு வழங்கப்பட்டுள்ளது அட்சய திருதியை நல்ல நாளில் கேப்டனின் மோதிரத்தை விஜய பிரபாகரனுக்கு வழங்குனேன். நானும் (பிரேமலதா), விஜய பிரபாகரனும்  அனைத்து தொகுதிகளுக்கும் செல்வோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

 

உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!...
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்...
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?...
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா...
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!...
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்......
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்...
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!...
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்...