Tirunelveli: திருநெல்வேலி தேரோட்டம்.. போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு!

திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமாதா கோயிலின் ஆனித் திருவிழா தேரோட்டம் 2025 ஜூலை 8ல் நடைபெறவுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர எதிர்பார்க்கப்படுவதால், போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பழைய, புதிய பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் வாகனங்களின் மாற்றுப் பாதைகள் பற்றிக் காணலாம்.

Tirunelveli: திருநெல்வேலி தேரோட்டம்.. போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு!

திருநெல்வேலி ஆனி தேரோட்டம்

Published: 

05 Jul 2025 07:41 AM

நெல்லை, ஜூலை 5: திருநெல்வேலி நெல்லையப்பர் – காந்தியம்மன் கோயிலில் ஆனி பெருந்திருவிழாவானது நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 2025, ஜூலை 8 ஆம் தேதி செவ்வாய்கிழமை வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளூர், வெளியூர் என லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என்பதால் உரிய போக்குவரத்து மாற்றங்களுடன் கூடிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

அறிவிக்கப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்

  • அதன்படி தேரோட்ட திருவிழா நாளில் நெல்லை மாநகராட்சி எதிரே உள்ள பொருட்காட்சி திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் டவுன் மார்க்கமாக வரும் பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்கி மீண்டும் தங்களுடைய இலக்குகளை அடையலாம்.
  • அதேபோல் நெல்லை சந்திப்பு பழைய பேருந்து நிலையத்திலிருந்து டவுன் மார்க்கமாக மானூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஆர்ச் வரை வந்து இடது புறம் திரும்பி நெல்லை கண்ணன் ரோடு வழியாக அருணகிரி தியேட்டர், தெற்கு மவுண்ட் ரோடு சென்று அங்கிருந்து வழுக்கோடை சந்திப்பின் இடது புறம் திரும்பி லாலுகாபுரம், கண்டியப்பேரி, ராமையன்பட்டி சந்திப்பு ராமையன்பட்டி விலக்கு வழியாக செல்லலாம்.
  • மேலும் மானூர் மார்க்கத்தில் இருந்து டவுன் வழியாக சந்திப்பு பேருந்து நிலையம் செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் ராமையன்பட்டி விலக்கு சென்று அங்கிருந்து குருநாதன் கோவில் சந்திப்பு, தச்சநல்லூர் பஜார் வழியாக ராம் தியேட்டர் பாலம் வந்து வண்ணாரப்பேட்டை அல்லது சந்திப்பு பேருந்து நிலையம் செல்லலாம்.
  • புதிய பேருந்து நிலையத்திலிருந்து தென்காசி மற்றும் செங்கோட்டை செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஸ்ரீபுரம், டவுன் ஆர்ச், நெல்லை கண்ணன் சாலை வழியாக சென்று தெற்கு மவுண்ட் ரோடு, காட்சி மண்டபம் வந்து வழுக்கோடை வழியாக வழக்கமான பாதையில் பயணிக்கலாம்.
  • அதேசமயம் தென்காசி மார்க்கத்திலிருந்து திருநெல்வேலிக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் பழைய பேட்டை வந்து கண்டிய பேரி சாலை வழியாக ராமையன்பட்டி சந்திப்பு, ராமையன்பட்டி விலக்கு, சத்திர புதுக்குளம், சங்கரன்கோவில் ரோடு, தச்சநல்லூர் வடக்கு புறவழிச் சாலை வழியாக வண்ணாரப்பேட்டை வந்து புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
  • தென்காசி மார்க்கத்திலிருந்து நெல்லை சந்திப்புக்கு வரும் நகரப் பேருந்துகள் அனைத்தும் பழைய பேட்டை, கண்டியப்பேரி சாலை வழியாக வந்து குருநாதன் கோவில் சந்திப்பிலிருந்து தச்சநல்லூர் பஜார் வழியாக ராம் தியேட்டர் சென்று அங்கிருந்து தங்கள் இலக்குகளை அடையலாம்.
  • புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேரன்மகாதேவி மார்க்கமாக பாபநாசம் வரை செல்லும் வாகனங்கள் அனைத்தும் தங்களது வழக்கமான பாதையில் பயணிக்கலாம்.
  • அதேசமயம் பாபநாசத்தில் இருந்து சேரன்மகாதேவி மார்க்கமாக டவுன் வழியாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் வழுக்கோடை சந்திப்பு சென்று இடது புறம் திரும்பி லாலுகாபுரம், கண்டியப்பேரி வழியாக ராமையன்பட்டி விலக்கு வந்து அங்கிருந்து தச்சநல்லூர் வடக்கு புறவழிச்சாலை சென்று வண்ணாரப்பேட்டை வழியாக புதிய பேருந்து நிலையம் செல்லலாம்.
  • சேரன்மகாதேவி மார்க்கத்திலிருந்து டவுன் வழியாக சந்திப்பு பழைய பேருந்து நிலையம் வரும் வாகனங்கள் அனைத்தும் லாலுகாபுரம், கண்டியப்பேரி சாலை, தச்சநல்லூர் பஜார் வழியாக ராம் தியேட்டர் வந்து இலக்கை அடையலாம்.
  • தேரோட்ட நாளில் தீயணைப்பு, ஆம்புலன்ஸ் மற்றும் அவசரகால மீட்பு வாகனங்கள் அனைத்தும் சொக்கப்பனை கார்னர், வஉசி தெரு,  குளப்பிறை தெரு, சத்தியமூர்த்தி தெரு வழியை பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் பாபநாசம் மற்றும் தென்காசி மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் தொண்டர் சன்னதி, புட்டாரத்தி அம்மன் கோவில் சந்திப்பு, வடக்கு மவுண்ட் சாலை அவசர வழியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.