Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கொளுத்தும் வெயில்.. 4 மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை… லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

Tamil Nadu Weather update : தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர, தேனி, தென்காசி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். அதே நேரத்தில், தமிழகத்தில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

கொளுத்தும் வெயில்.. 4 மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை… லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
தமிழகத்தில் மழைImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Published: 10 Apr 2025 06:17 AM

சென்னை, ஏப்ரல் 10: தமிழகதில் 2025 ஏப்ரல் 10ஆம் தேதியான இன்று ஒருசில மாவட்டங்களில் கனமழை  (Tamil Nadu Weather Alert) பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், பகல் நேரங்களில் மக்கள் வெளியே வராமல் தவித்து வருகின்றனர்.

4 மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இப்போதே 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. வரும் நாட்களில் வெப்பநிலை கடுமையாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில், அவ்வப்போது பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 2025 ஏப்ரல் 10ஆம் தேதியான இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தென்மேற்று மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரததில் வடக்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வடகிழக்கு திசையில் திரும்பி, மத்திய வங்கக் கடல் பகுதிகளில் படிப்படியாக வலுகுறையக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

லேட்டஸ்ட் வானிலை அப்டேட்

இதனால், தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, 2025 ஏப்ரல் 10ஆம் தேதியான இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் கோயம்புத்தூர மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, நீலகிரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2025 ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. அதே நேத்தில், 2025 ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை 2025 ஏப்ரல் 10ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வீராணம் ஏரியில் நுரை பொங்கி வரும் நீர்! விவசாயிகள், மக்கள் அச்சம்
வீராணம் ஏரியில் நுரை பொங்கி வரும் நீர்! விவசாயிகள், மக்கள் அச்சம்...
எல்லையில் பரபரப்பு.. சிக்கிய பாகிஸ்தான் ராணுவ வீரர்!
எல்லையில் பரபரப்பு.. சிக்கிய பாகிஸ்தான் ராணுவ வீரர்!...
ஊட்டிக்கு டூர் போறீங்களா? இன்னொரு ஸ்பெஷல் காத்திருக்கு...
ஊட்டிக்கு டூர் போறீங்களா? இன்னொரு ஸ்பெஷல் காத்திருக்கு......
துன்பங்களை போக்கும் வாசவி ஜெயந்தி எப்போது? - வழிபாடு முறைகள் இதோ!
துன்பங்களை போக்கும் வாசவி ஜெயந்தி எப்போது? - வழிபாடு முறைகள் இதோ!...
ஆம்னி வேனும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து... 4 பேர் பலி
ஆம்னி வேனும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து... 4 பேர் பலி...
அமைச்சர்கள் சென்னையில் இருக்கக்கூடாது முதலமைச்சர் ஸ்டாலின் கறார்
அமைச்சர்கள் சென்னையில் இருக்கக்கூடாது முதலமைச்சர் ஸ்டாலின் கறார்...
ஆன்லைன் ரம்மியால் வெடித்த மோதல்... கார் ஏற்றி ஒருவர் கொலை
ஆன்லைன் ரம்மியால் வெடித்த மோதல்... கார் ஏற்றி ஒருவர் கொலை...
மனைவியை கொன்று நாடமாடிய ஜிம் மாஸ்டர்.. சிக்கியது எப்படி?
மனைவியை கொன்று நாடமாடிய ஜிம் மாஸ்டர்.. சிக்கியது எப்படி?...
தமிழ் சினிமாவின் பேரழகி.. நடிகை த்ரிஷா பிறந்தநாள் இன்று!
தமிழ் சினிமாவின் பேரழகி.. நடிகை த்ரிஷா பிறந்தநாள் இன்று!...
கௌரவ வெற்றிக்காக ராஜஸ்தான்! கட்டாய வெற்றிக்காக கொல்கத்தா!
கௌரவ வெற்றிக்காக ராஜஸ்தான்! கட்டாய வெற்றிக்காக கொல்கத்தா!...
மீன்பிடித் தடைகாலம்: மீன் வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு
மீன்பிடித் தடைகாலம்: மீன் வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு...