Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பயணிகளே கவனியுங்கள்… பராமரிப்பு பணியால் ஒரு மாதத்துக்கு ரெயில் சேவையில் மாற்றம், ரத்து…

Tamil Nadu Train Updates: 2025 ஜூன் 23 முதல் ஜூலை 22, 2025 வரை தமிழ்நாட்டில் பல ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அரக்கோணம்-ஜோலார்பேட்டை இடையேயான பராமரிப்புப் பணிகளால் சில பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாகர்கோவில் ரயில் நிலைய பராமரிப்பு காரணமாக, பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் கன்னியாகுமரி வரையே இயக்கப்படுகின்றன.

பயணிகளே கவனியுங்கள்… பராமரிப்பு பணியால்  ஒரு மாதத்துக்கு ரெயில் சேவையில் மாற்றம், ரத்து…
ரெயில் சேவையில் மாற்றம்Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 21 Jun 2025 08:54 AM

தமிழ்நாடு ஜூன் 21: அரக்கோணம்–ஜோலார்பேட்டை (Arakkonam–Jolarpet) இடையே பராமரிப்பு பணியால் 2025 ஜூன் 23 அன்று காட்பாடி–ஜோலார்பேட்டை (Katpadi–Jolarpet) பயணிகள் ரெயில்கள் இரண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் ரெயில் நிலைய பராமரிப்பு (Nagercoil Railway Station Maintenance) காரணமாக, தாம்பரம் மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 2025 ஜூலை 21 வரை கன்னியாகுமரி வரை மட்டுமே இயக்கப்படும். அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (Antyodaya Express train) நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும். நெல்லை–நாகர்கோவில் இடையே ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. 2025 ஜூன் 23 முதல் 2025 ஜூலை 22 வரை மாற்றப்பட்ட தாம்பரம்–நாகர்கோவில் ரெயில்கள் கன்னியாகுமரியில் இருந்து இயக்கப்படும். பயணிகள் முன்கூட்டியே ரெயில் தகவல்களை சரிபார்த்து பயணிக்க வேண்டுமென தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது.

ஜோலார்பேட்டை வழித்தடத்தில் ரெயில் ரத்து

அரக்கோணம் – ஜோலார்பேட்டை இடையிலுள்ள வளத்தூர் மற்றும் குடியாத்தம் ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், 2025 ஜூன் 23 ஆம் தேதி காட்பாடி முதல் காலை 10.30 மணிக்கு ஜோலார்பேட்டை நோக்கி செல்லும் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மதியம் 12.55 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டு காட்பாடிக்கு செல்லும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவிலை மையமாகக் கொண்ட ரெயில்களில் மாற்றம்

நாகர்கோவில் ரெயில் நிலைய பராமரிப்பு பணிக்காக, பல எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றப்பட்டு இயக்கப்படுகின்றன. தாம்பரத்திலிருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரெயில் (22657) 2025 ஜூன் 23 முதல் ஜூலை 21 வரை நாகர்கோவிலை மாற்றாக கன்னியாகுமரி வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல், 22658 ரெயில் 2025 ஜூன் 23 முதல் 2025 ஜூலை 22 வரை கன்னியாகுமரியிலிருந்து தாம்பரத்திற்கு புறப்படும்.

பராமரிப்பு பணியால் ரெயில் சேவையில் மாற்றம்

பகுதி நேர ரத்து செய்யப்பட்ட ரெயில்கள்

தாம்பரத்திலிருந்து புறப்படும் 12667 எக்ஸ்பிரஸ் ஜூன் 26 முதல் ஜூலை 17 வரை, மற்றும் நாகர்கோவிலில் இருந்து வரும் 12668 ரெயில் ஜூன் 27 முதல் ஜூலை 18 வரை கன்னியாகுமரி வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படும் 12689 ரெயில் ஜூன் 27 முதல் ஜூலை 18 வரை, மற்றும் நாகர்கோவில்-சென்னை சென்ட்ரல் ரெயில் (12690) ஜூன் 29 முதல் ஜூலை 20 வரை கன்னியாகுமரி வரையிலேயே இயக்கப்படும்.

அந்தியோதயா எக்ஸ்பிரஸ் – நெல்லை வரை மட்டுமே இயக்கம்

தாம்பரத்தில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20691) ஜூன் 23 முதல் ஜூலை 21 வரை நெல்லை வரை மட்டுமே இயங்கும். இதேபோல், நெல்லையிலிருந்து தாம்பரத்திற்கு புறப்படும் ரெயில் (20692) 2025 ஜூன் 23 முதல் ஜூலை 22 வரை நெல்லையில் இருந்து மட்டுமே இயக்கப்படும். நெல்லை – நாகர்கோவில் இடையே இந்த ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

பயண திட்டங்களை சரி பார்க்குமாறு பயணிகளுக்கு அறிவுரை

இப்பெயர் பட்ட ரெயில்கள் பயண திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தும் வகையில் இருப்பதால், பயணிகள் முன்கூட்டியே தகவல்களை சரிபார்த்து திட்டமிடுமாறு தெற்கு ரெயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.