Tamil Nadu News Live Updates: காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – மக்களுக்கு எச்சரிக்கை!
Tamil Nadu Breaking news Today 28 July 2025, Live Updates: கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையோரப்பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LIVE NEWS & UPDATES
-
காவிரி நீர் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்..
மேட்டூர் அணையிலிருந்து கடந்த சில நாட்களாக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் குருவைப் பயிர்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைத்துள்ளது. நீர்நிலைகளும் நிரம்பியதால் பாசனத்திற்கு தண்ணீரும் தேவை குறைந்துவிட்ட நிலையில், அணையிலிர்ந்து தினமும் திறந்து விடப்படும் நீரில் பெரும்பாலான நீர் வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை ஓரளவாவது தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்
-
ஆடிப்பூரம் திருவிழா.. நெல்லையப்பர் கோயிலில் திரண்ட பக்தர்கள்..
ஆடிப்பூரம் என்பது ஆடி மாதத்தில் வரக்கூடிய பூர நட்சத்திரம் ஆகும் இது ஆண்டாளுக்கு மிகவும் விசேஷமான நாளாகும் அந்த வகையில் நெல்லையில் இருக்கக்கூடிய நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவானது கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது அதேபோல் ஜூலை 21 2025 அன்று காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்த நிலையில் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு அந்த கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு ஆயிரம் கணக்கான வளையல்கள் வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது இதனை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு உள்ளனர்.
-
அதிகரிக்கும் போதைப்பொருள் பழக்கம்.. இரண்டு பேர் கைது
போலீசார் மேற்கொண்ட சோதனையின் போது பொத்தேரி அடுத்த ஒரு தனியார் குடியிருப்பில் போதை மாத்திரைகள், பாங்கு அதே போல் கஞ்சா அடிக்க பயன்படுத்தக்கூடிய பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கு இருந்த இரண்டு பேரை கைது செய்து மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படிக்க
-
சென்னையில் போலீசார் அதிரடி சோதனை.. சிக்கிய போதை பொருட்கள்..
சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் தாம்பரம் காவல் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையிலான சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென அங்கு உள்ள விடுதிகள் அதேபோல் சிறு கடைகள் டீக்கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மப்டியில் சோதனைகள் ஈடுபட்டனர். அதில் பல்வேறு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
-
விமானத்தின் அவசர கால கதவு திறக்கப்பட்டதால் பரபரப்பு…
சென்னையில் இருந்து புறப்பட தயாராக இண்டிகோ விமானத்தில் அவசர கால கதவு திறப்பதற்கான பட்டனை அழுத்திய மாணவரால் பரபரப்பு ஏற்பட்டது. கவன குறைவால் தெரியாமல் அழுத்திவிட்டதாக கூறிய அவரது பயணத்தை ரத்து செய்து விமானத்திலிருந்து அவரை கீழே இறக்கி விட்டனர். வழக்கு பதிவு செய்து பயணியிடம் தொடர்ந்து சென்னை விமான நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படிக்க..
-
சென்னை: விமானம் புறப்படும் போது ஒலித்த எமர்ஜென்சி அலாரம்..
சென்னையில் இருந்து துர்காபூருக்கு 164 பேருடன் (158 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள்) இண்டிகோ விமானம் புறப்பட தயாராகி கொண்டிருந்தது. அப்போது, பயணிகள் கிளம்ப தயாராக இருந்த நிலையில், கதவுகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. விமானம் புறப்படுவதற்காக டாக்ஸியில் சென்று கொண்டிருந்தபோது, விமானத்தில் அவசர அலாரம் ஒலித்தது. இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பௌ ஏற்பட்டது.
-
வெகுவிமரிசையாக நடைபெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம்
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு வெகுவிமரிசையாக நடைபெற்ற தேரோட்ட திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
-
இண்டிகோ விமானத்தில் அவசரகால பட்டனை அழுத்திய கல்லூரி மாணவர்
சென்னையில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் அவசரகால பட்டனை அழுத்திய கல்லூரி மாணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கவனக்குறைவால் தெரியாமல் செய்ததாக சொன்னதால் அவரை எச்சரித்து விமான பயணத்தை ரத்து செய்து கீழே இறக்கி விட்டனர்.
-
ஆடிப்பூரத்தை முன்னிட்டு 2 லட்சம் வளையல்களை கொண்டு அலங்காரம்
ஆடிப்பூரத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் 2 லட்சம் வளையல்களை கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோயில்களிலும் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
-
நலம் காக்கும் திட்டத்தின் கீழ் முழு உடல் பரிசோதனை செய்யலாம்!
2025, ஆகஸ்ட் 2ல் தொடங்கவுள்ள தமிழ்நாடு அரசின் நலம் காக்கும் திட்டத்தின் கீழ் முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். இந்த திட்டத்தை சாந்தோமில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் படிக்க
-
நகை வாங்குவது போல நடித்து ஒரு கிலோ வெள்ளி கொள்ளை.. 4 பெண்கள் கைது
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் நகை வாங்குவது போல நடித்து ஒரு கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கலைவாணி, ஜெயமாலா, தாரணி, ஷோபனா ஆகிய 4 பேரை பெருமாநல்லூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
-
ஓடும் ரயிலில் கத்தியைக் காட்டி மிரட்டி 12 சவரன் நகைகள் பறிப்பு
அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் இருந்து பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 12 சவரன் நகைகளை பறித்துச் சென்ற நபரை இரயில்வே போலீசார் தேடி வருகின்றனர். ரயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து பிடிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
-
கல்லூரி மாணவர்களிடம் இருந்து கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே செயல்படும் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் அறைகளில் தாம்பரம் துணை ஆணையர் பவன்குமார் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 5200 கஞ்சா சாக்லேட்டுகள், குட்கா, பான் மசாலா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
-
Vaiko: பிரச்னைகளை தீர்க்காமல் அரசியல் நாடகம்.. சாடிய வைகோ!
இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்ததை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பிரச்னைகளை தீர்க்காமல் அரசியல் நாடகம் நடத்துவதாகவும், பிரதமர் வருகைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என கூறியுள்ளார். மேலும் படிக்க
-
வீடு திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின்.. வெளியான முக்கிய அப்டேட்
உடல்நலக்குறைவால் ஒருவாரம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இப்படியான நிலையில் அவர் 3 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு அலுவல் பணிகளை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
Rain News Live: சென்னை நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை நகரின் ஒரு சில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் மழைப்பொழிவை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
Local Holiday: செங்கல்பட்டு, விருதுநகருக்கு இன்று உள்ளூர் விடுமுறை
ஆடி மாதத்தில் வரும் மிக முக்கிய பண்டிகையான ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மற்றும் விருதுநகர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெறும்ம் விழாவை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
மதுவிலக்குக்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும்: கே.வி.தங்கபாலு
காமராஜருக்கு எதிராக யார் பேசினாலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காங்கிரஸின் கொள்கை பூரண மதுவிலக்கு, அதற்காக நாங்கள் போராடுவோம் என தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வார காலம் சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்து வந்த முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (ஜூலை 27) வீடு திரும்பினார். அவருக்கு திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஓரிரு நாளில் அவர் தனது அலுவல் பணிகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக மக்களின் உரிமைகளை மீட்க நடைபயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நான்காவது நாளாக இன்று மக்களை சந்திக்க உள்ளார். ஓட்டுக்காக உங்களை சந்திக்கவில்லை என்றும், உங்கள் உரிமைகளை மீட்க வந்தேன் என்றும் அவர் தனது பரப்புரையின் போது தெரிவித்தார். தமிழகத்தில் ஆடி மாதத்தின் மிக முக்கிய ஆன்மீக நிகழ்வாக கருதப்படும் ஆடிப்பூரம் திருவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இதனால் அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து அம்மன் கோயில்களிலும் வெகு விமரிசையாக ஆடிப்பூர வளைகாப்பு திருவிழா நடைபெறுகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து உபரிநீராக ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஆடி திருவாதிரை முன்னிட்டு நேற்று (ஜூலை 27) அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கு பேசிய அவர், தமிழ்நாட்டில் ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள
Published On - Jul 28,2025 7:00 AM