சண்டே ஷாப்பிங்.. வணிவளாகத்தில் முதல்வர் ஸ்டாலின்.. இணையத்தில் வைரலாகும் காட்சிகள்..

Tamilnadu CM MK Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 31, 2025 அன்று லண்டன் மற்றும் ஜெர்மனி புறப்பட்டு செல்கிறார். இந்தநிலையில், அவர் சென்னையில் இருக்கும் பிரபல எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் ஷாப்பிங் செய்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சண்டே ஷாப்பிங்..  வணிவளாகத்தில் முதல்வர் ஸ்டாலின்.. இணையத்தில் வைரலாகும் காட்சிகள்..

முதல்வர் ஸ்டாலின் ஷாப்பிங்

Published: 

24 Aug 2025 15:59 PM

சென்னை, ஆகஸ்ட் 24, 2025: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகின்ற ஆகஸ்ட் 31 2025 அன்று வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். லண்டன் மற்றும் ஜெர்மனி செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழில் முதலீடுகள் குறித்து பல்வேறு சந்திப்புகள் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் சென்னையில் இருக்கக்கூடிய பிரபல வணிகவளாகத்தில் அவர் ஷாப்பிங் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் அவருக்கு தேவையான சில பொருட்களை வாங்குவதற்காக வணிகவளாகம் வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்பதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு வருகிறார்.

மேலும் படிக்க: இந்தியாவின் ஏழை முதல்வர் இவரா? அப்போ பணக்காரர் யார்? லிஸ்டில் CM ஸ்டாலின் எங்கே!

லண்டன் ஜெர்மனி செல்லும் முதல்வர ஸ்டாலின்:

சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அப்போது வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் கார் தொழிற்சாலையை அவர் திறந்து வைத்து கார் விற்பனையை துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இதுவரை பல்வேறு வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி லண்டன் மற்றும் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்கிறார். 10 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 10 2025 அன்று மீண்டும் தமிழகம் திரும்புகிறார்.

ஷாப்பிங் போன முதலமைச்சர் ஸ்டாலின்:


இந்த பயணத்தின் போது அவர் தொழில் நிறுவனங்களை சந்தித்து முதலீடுகளை ஈர்ப்பதற்கான பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் உயர் அதிகாரிகள் உடன் செல்வார்கள். என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ‘இந்தி தெரியும் போடா’ பயணிகளின் கவனத்தை பெற்ற தமிழக விமானி.. வைரல் வீடியோ!

இந்த நிலையில் அவர் சென்னையில் இருக்கக்கூடிய பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் ஷாப்பிங் செய்துள்ளார். வெளிநாட்டு பயணத்தின் போது அவருக்கு தேவையான பொருட்களை அவர் வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது