‘துன்புறுத்தக் கூடாது.. சுய ஒழுக்கம் தேவை’ லாக்அப் மரணம்.. காவலர்களுக்கு ஏடிஜிபி அட்வைஸ்!
ADGP Davidson Devasirvatham : சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித் குமார் உயிரிழந்ததை தொடர்ந்து, மண்டல ஐஜிக்கள், எஸ்பிக்கள், அதிகாரிகளுக்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். குறிப்பாக, புகார் கொடுக்க வருபவர்கள் குறித்து எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பகு குறித்தும் அறிவுறுத்தியுள்ளார்.

ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம்
சிவகங்கை, ஜூலை 02 : சிவகங்கை லாக்அப் மரணத்தை (Sivaganga Custodial Death) தொடர்ந்து, காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் (ADGP Davidson Devasirvatham) முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் உயிரிழந்தது மாநிலத்தையே உலுக்கிய உள்ளது. போலீசார் கடுமையாக தாக்கியதில் இளைஞர் அஜித் குமார் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், போலீசார் அவரை சித்ரவதை செய்துள்ளதாகவும் தெரிகிறது. இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இந்த வழக்கு தொடர்பாக 5 போலீசார் கைது செய்துள்ளனர். கைதான 5 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 பேரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில், இந்த விஷயத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள், காவலர்களின் ஆராஜக போக்கை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்
இந்த சூழலில், சிவகங்கை லாக்அப் மரணத்தை தொடர்ந்து அனைத்து காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. 2025 ஜூலை 02 ஆம் தேதியான இன்று நடந்த கூட்டத்தில் மண்டல ஐஜிக்கள், எஸ்பிக்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று பல்வேறு உத்தரவுகள் அறிவுறுத்தல்களை ஏடிஜிபி வழங்கி உள்ளார்.
அதன்படி, ” காவலர்களுக்கு முதல் அதிகாரிகள் வரை சுய ஒழுக்கம் இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் தற்போது ஒரு தவறான செய்தி பதிவிடப்பட்டுள்ளது எனில் அதுதான் அதிகமாக பொதுமக்கள் மத்தியில் பரவுகிறது. அது போல ஏதும் பதிவிடப்பட்டிருந்தால் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதன் உண்மை தன்மை குறித்து மீடியாவில் பேட்டியாக கொடுக்கலாம்.
மேலும், State Fact Team-க்கு அனுப்பி அதன் உண்மை தன்மையை கண்டிறிய வேண்டும். அது பொய் செய்தியாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது Legal opinion பெற்று வழக்குப்பதிவு செய்ய வேண்டும். காவல் நிலையத்துக்கு யாரும் புகார் அளிக்க வந்தால் உடனடியா FIR / CSR கொடுக்க வேண்டும். அதில் எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது.
புகார் அளிக்க வருபவர்களை அலைக்கழிக்க கூடாது
காவல் நிலையத்தில் இதற்காகவே தான் RECEPTIONIST நியமிக்கப்பட்டு உள்ளார்கள். இதில் எந்த ஒரு தங்கு தடையும் இருக்கக் கூடாது. மேலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களிடம் பேப்பர் இல்லை பேப்பர் வாங்கிட்டு வா என்றோ, அதிகாரி இல்லை என்று சொல்லி அலைக்கழிக்கவோ திருப்பி அனுப்பவோ கூடாது.
ஏதாவது பாதுகாப்பு அலுவல் என்றால் காவல் நிலையத்திலிருந்து காவலர்களை மொத்தமாக எடுக்கக்கூடாது. தேவை இல்லாமல் அதிகமான காவலர்கள் ஒரே இடத்தில் நியமிக்க கூடாது. சாலை மறியல், ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு தகுந்த பயிற்சி கொடுக்க வேண்டும் தேவையில்லாமல் லத்தியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.