ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்.. புகாரளிக்க எண்கள் அறிவிப்பு.. அமைச்சர் சிவசங்கர் வார்னிங்!
Omni Bus Fare Hike : தீபாவளி பண்டிகையையொட்டி, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. எனவே, ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதிக கட்டணம் வசூலித்தால் பேருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆம்னி பேருந்துகள்
சென்னை, அக்டோபர் 12 : தீபாவளி பண்டிகையையொட்டி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆம்னி பேருந்துகளின் கட்டண வசூலை கண்காணிக்க போக்குவரத்து துறையின் சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் தீபாவளி பண்டிகை 2025 அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். 2025 அக்டோபர் 18ஆம் தேதியில் இருந்தே மக்கள் தங்கள் ஊர்களுக்கு படையெடுப்பார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் ஆகியவற்றிற்காக வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் தங்கியுள்ளனர். அவர்கள் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு புறப்படுககின்றனர். இவர்களுக்காக அரசு சார்பில் சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்
ரயில்களில் முன்பதிவு செய்யாதவர்கள், பேருந்துகளில் முன்பதிவு செய்யதாவர்கள் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க விரும்புவார்கள். இந்த பேருந்துகளில் வழக்கமான நாட்களை காட்டிலும் தீபாவளி, பொங்கள் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். இதுபோன்ற பண்டிகை காலங்களில் பயணிகளின் கூட்டத்தை மையமாக வைத்து, ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், 2025 அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்ல அக்டோபர் 17, 2025 அன்று ரூ.5,000 கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிகிறது. வழக்கமாக சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரூ.1,300 முதல் ரூ.1,500 கட்டணமாக நிர்ணயிக்கப்படும். அதேபோல, சென்னையில் இருந்து மதுரைக்கு வழக்கமாக ரூ.800 முதல் ரூ.1200 வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.4,100 ஆக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிகிறது.
Also Read : சிவகாசியில் வெடித்து சிதறும் பட்டாசு ஆலை.. உள்ளே சிக்கிய தொழிலாளர்கள்.. நிலைமை என்ன?
புகாரளிக்க எண்கள் அறிவிப்பு
இதே போன்று தான் சென்னையில் இருந்து பிற மாவட்டங்ளுக்கு வசூலிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் தான், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
Also Read : எங்கள் கட்சி கொடியவே அதிமுக காரங்க தூக்க மாட்டாங்க.. ஜாலியாக பேசிய செல்லூர் ராஜூ!
மேலும், பயணிகளின் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 94450 14436, 1800 426 6151, 044- 24749002, 044-26280445, 044 – 026251611 ஆகிய கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும், புகார் அளிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறை சென்னை கிளாம்பாக்கத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.