Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழ் புத்தாண்டு: எந்தெந்த ஊர்களுக்கெல்லாம் சிறப்பு ரயில்கள் இயக்கம்..?

Southern Railway Announces: தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு வெளியிட்டது. சென்னை, தாம்பரம், மங்களூரு உள்ளிட்ட இடங்களிலிருந்து கன்னியாகுமரி, கொல்லம், போத்தனூர், திருவனந்தபுரம் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் அதிக எண்ணிக்கையை கருத்தில் கொண்டு 2025 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இவை செயல்படும்.

தமிழ் புத்தாண்டு: எந்தெந்த ஊர்களுக்கெல்லாம் சிறப்பு ரயில்கள் இயக்கம்..?
சிறப்பு ரயில்கள் இயக்கம்Image Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Published: 10 Apr 2025 06:41 AM

தமிழ்நாடு ஏப்ரல் 10: தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளியை (Tamil New Year and Good Friday) முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை (Southern Railway special trains) அறிவித்துள்ளது. சென்னை–கன்னியாகுமரி, சென்னை–கொல்லம், சென்னை–போத்தனூர், தாம்பரம்–போத்தனூர், மங்களூரு–திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படும். 2025 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நியமிக்கப்பட்ட தேதிகளில் ரயில்கள் பயணிக்கின்றன. படுக்கை வசதி, ஏசி பெட்டிகள் மற்றும் பொதுப் பெட்டிகள் உள்ளிட்ட வசதிகள் ரயில்களில் உள்ளன. பெரும்பாலும் இந்த ரயில்கள் அரக்கோணம், சேலம், மதுரை, திருச்சி, எர்ணாகுளம் உள்ளிட்ட முக்கிய நிலையங்கள் வழியாக செல்லும். இந்த சிறப்பு ரயில்கள், கூட்ட நெரிசலை குறைத்து, பயணிகளுக்கு வசதி ஏற்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை – கன்னியாகுமரி சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரலிலிருந்து 2025 ஏப்ரல் 10 மற்றும் 17-ஆம் தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 06089) மறுநாள் காலை 10 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும். திரும்பும் ரயில் (எண்: 06090) 2025 ஏப்ரல் 11 மற்றும் 18-ஆம் தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு சென்னையை அடையும்.

இதில் 12 படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் 6 பொதுப் பெட்டிகள் இருக்கும். ரயில் வழித்தடம்: அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில்.

சென்னை – கொல்லம் சிறப்பு ரயில்

2025 ஏப்ரல் 12 மற்றும் 19-ஆம் தேதிகளில் இரவு 11.20-க்கு சென்னையில் இருந்து புறப்படும் ரயில் (எண்: 06113), மறுநாள் பிற்பகல் 3.30-க்கு கொல்லம் சென்றடையும். திரும்பும் ரயில் (எண்: 06114) 20 25ஏப்ரல் 13 மற்றும் 20-ஆம் தேதிகளில் இரவு 7.10-க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.10-க்கு சென்னையை அடையும்.

12 படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் 6 பொதுப் பெட்டிகள் உள்ளன. வழித்தடம்: அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், செங்கனூர், மாவேலிக்கரா.

சென்னை – போத்தனூர் (கோவை) சிறப்பு ரயில்

2025 ஏப்ரல் 11 இரவு 11.50-க்கு சென்னையிலிருந்து புறப்படும் ரயில் (எண்: 06027), மறுநாள் காலை 8.30-க்கு போத்தனூரை அடையும். திரும்பும் ரயில் 2025 ஏப்ரல் 14 இரவு 11.30-க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.20-க்கு சென்னையை வந்தடையும்.

இதில் 11 ஏசி பெட்டிகள் மற்றும் 7 படுக்கை வசதி பெட்டிகள் உள்ளன. வழித்தடம்: பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர்.

தாம்பரம் – போத்தனூர் சிறப்பு ரயில்

2025 ஏப்ரல் 11, 18, 25 மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் மாலை 5.05-க்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் ரயில் (எண்: 06185), மறுநாள் காலை 7.45-க்கு போத்தனூரை அடையும். திரும்பும் ரயில் (எண்: 06186) 2025 ஏப்ரல் 13, 20, 27 மற்றும் மே 4 தேதிகளில் இரவு 11.55-க்கு புறப்பட்டு, மறுநாள் 12.15-க்கு தாம்பரத்தை அடையும்.

இதில் 4 ஏசி பெட்டிகள், 12 படுக்கை வசதி பெட்டிகள், 2 பொதுப் பெட்டிகள் உள்ளன. வழித்தடம்: செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு.

மங்களூரு – திருவனந்தபுரம் சிறப்பு ரயில்

2025 ஏப்ரல் 10 மற்றும் 17-ஆம் தேதிகளில் மாலை 6 மணிக்கு மங்களூரில் இருந்து புறப்படும் ரயில் (எண்: 06051), மறுநாள் காலை 6.35-க்கு திருவனந்தபுரம் சென்றடையும். திரும்பும் ரயில் (எண்: 06052) 2025 ஏப்ரல் 11 மற்றும் 18-ஆம் தேதிகளில் மாலை 6.40-க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7 மணிக்கு மங்களூரை அடையும்.

இதில் ஒரு ஏசி பெட்டி, 12 படுக்கை வசதி பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் உள்ளன. வழித்தடம்: காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, ஷொரனூர், திருச்சூர், எர்ணாகுளம், ஆலப்புழை, கொல்லம்.