தமிழகத்தில் தேங்காய் விலை உச்சத்திற்கு போகுமா? விலை மேலும் உயரும் அபாயம்
Coimbatore Coconut Crisis:கோயம்புத்தூரில் வேர் வாடல் நோய் தாக்கியதால் 28 லட்சம் தென்னை மரங்கள் அழிக்கப்பட உள்ளன. இதனால் தேங்காய் உற்பத்தி 60% குறைந்து, விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேங்காய் விலை தொடர்ந்து உயரும் அபாயம் உள்ளது.

வேர் வாடல் நோயால் தேங்காய் உற்பத்தி கடுமையாக பாதிப்பு
கோயம்புத்தூர் மே 14: கோயம்புத்தூரில் வேர் வாடல் நோயால் (Root Wilt Disease) 28 லட்சம் தென்னை மரங்கள் வெட்டப்பட உள்ளன. இதனால் தமிழகத்தில் தேங்காய் உற்பத்தி பெரிதும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டில் ரூ.18-19 இருந்த தேங்காய் விலை, தற்போது ரூ.55 வரை உயர்ந்துள்ளது. வழக்கமாக ஒரு ஏக்கரில் 2,000 தேங்காய் கிடைப்பதாம், தற்போது அது 800-க்கு குறைந்துள்ளதாம். இந்த நோயின் காரணமாக தேங்காய் உற்பத்தி சுமார் 60% வரை குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நோயை கட்டுப்படுத்த எந்த வகையிலும் அரசு நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பதே அவர்களின் முக்கிய குறையாக உள்ளது.
வேர் வாடல் நோயால் உற்பத்தி கடுமையாக பாதிப்பு
கோயம்புத்தூரில் வேர் வாடல் நோய் (Root Wilt Disease) பரவிய காரணத்தால், 40,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள 28 லட்சம் தென்னை மரங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெட்டப்பட உள்ளன. இதன் விளைவாக, தமிழகத்தில் தேங்காய் விலை மேலும் உயரக்கூடும் என விவசாயத் துறை வட்டாரங்கள் எச்சரிக்கின்றன. 2023ஆம் ஆண்டில் ஒரு கிலோ தேங்காய் ரூ.18-19க்கு விற்கப்பட்டது. ஆனால், சாகுபடி குறைந்ததால், தற்போது விலை மூன்று மடங்கு அதிகரித்து ரூ.55 வரை சென்றுவிட்டது.
தேங்காய் தேவை அதிகம் – விலை மேலும் உயரும் அபாயம்
சாம்பார் முதல் பொரியல் வரை பல உணவுகளில் முக்கிய மூலப்பொருளாக தேங்காய் இருக்கிறது. சைவம், அசைவம் என்ற பேதமின்றி அனைத்து உணவுகளிலும் தேங்காய் சேர்க்கப்படுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தேங்காயின் விலை நாளுக்கு நாள் உயர்வடைவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் – தமிழகத்தின் முக்கிய தேங்காய் உற்பத்தி மாவட்டம்
தமிழ்நாட்டில் அதிகமான தேங்காய் உற்பத்தி நடைபெறும் மாவட்டமாக கோயம்புத்தூர் உள்ளது. இம்மாவட்டத்தில் மொத்த நிலப்பரப்பில் 20 சதவிகிதம் தென்னை சாகுபடிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வேர் வாடல் நோயால் இந்த மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சாகுபடிக்கும் பாதிப்பு ஏற்பட்டு, தேங்காய் உற்பத்தி வெகுவாக குறைவடையும் நிலையில் உள்ளது. இதனால் தேங்காய் விலை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோய் பரவலுக்கும், துறை மந்ததற்கும் விவசாயிகள் வருத்தம்
இந்த நிலைமை குறித்துத் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது: “கர்நாடகாவுக்கு அடுத்ததாக தமிழ்நாடு தேங்காய் சாகுபடியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனால், 2019 முதல் கேரளாவில் இருந்து வேர் வாடல் நோய் பரவி தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த எந்த திட்டமிட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் விளைவாக, தேங்காய் உற்பத்தி 60% வரை குறைந்துள்ளது,” என அவர் தெரிவித்தார்.
வியாபாரிகளும் கவலை – மகசூல் குறைந்ததால் விலை உயர்வு
பொள்ளாச்சியைச் சேர்ந்த வியாபாரி ஜீவானந்தம் கூறுகையில், “முந்தைய ஆண்டுகளில் ஒரு ஏக்கரில் சுமார் 2,000 தேங்காய்கள் கிடைத்தன. ஆனால், இப்போது அந்த எண்ணிக்கை 800க்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை ரூ.55 வரை உயர்ந்துள்ளது. மகசூல் மேலும் குறைந்தால் விலை கூட அதிகரிக்கக்கூடும்,” என்றார்.
தேங்காய் என்பது தமிழர்களின் அன்றாட உணவுக்கட்டாய பொருள். இப்போது அந்த தேங்காயின் விலை தொடர்ந்து உயரும் சூழல் உருவாகியுள்ளது. வேர் வாடல் நோயை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் அரசு தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை என்றால், இது நுகர்வோர்களுக்கும், விவசாயிகளுக்கும் இரட்டைக் கஷ்டத்தை ஏற்படுத்தும்.