தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16, 2025 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் காரணமாக தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் கனமழை (Heavy Rain) பெய்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான அணைகள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.. அதன் பின்னர் இரு வாரங்களாக பெரிய அளவில் மழை இல்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் மழை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் நவம்பர் 15, 2025 அன்று பகிர்ந்த தகவலில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என்றும் குறிப்பிட்ட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் (Orange Alert) கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறும் என வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : கடிக்க பாய்ந்ததால் ஆத்திரம்.. தெரு நாயை கட்டையால் அடித்து கொலை செய்த நபர்!




மேலும், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 16, 2025 நாளை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் இம்மாவட்டங்களில் உள்ள மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே போல மயிலாடுதுறை, திருவாரூர் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்ளில் நவம்பர் 15, 2025 ஆன இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருப்பதால் மக்கள் தேவையில்லாமல் நீர் நிலைகளுக்கு அருகே செல்ல வேண்டாம் எனவும், தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்வது குறித்து எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : கார்த்திகை தீபம் விடுமுறை… சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு – எங்கிருந்து தெரியுமா?
வடகிழக்கு பருவமழை அடுத்த வாரங்களில் மேலும் வலுப்பெறக்கூடும் என நிபுணர்கள் கூறுவதால், தமிழகத்தில் மீண்டும் பரவலான மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நவம்பர், 2025 இறுதி வரை மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.