Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோயில் விழாக்களில் சாதி பெயர் கூடாது.. இந்து சமய அறநிலையத்துறையின் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை!

Madurai High Court Interim Stay on HRCE Rules | தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் சாதி பெயர் பயன்படுத்த கூடாது என்ற இந்து சமய அறநிலையத்துறையின் சுற்றரிக்கைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 4 வாரம் இடைக்கால உத்தரவி பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய விளக்கம் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோயில் விழாக்களில் சாதி பெயர் கூடாது.. இந்து சமய அறநிலையத்துறையின் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 10 Apr 2025 16:37 PM

மதுரை, ஏப்ரல் 10 : கோயில் திருவிழாக்களில் அச்சடிக்கப்படும் வரவேற்பிதழ் உள்ளிட்டவற்றில் எந்த வித சாதி பெயரையும் பயன்படுத்த கூடாது என்ற இந்து சமய அறநிலையத்துறையின் (HRCE – Hindu Religious and charitable Endowments Department) சுற்றரிக்கைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை (Madurai High Court) இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த விவகரத்தில் ஆணையர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டும் நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கு குறித்த தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை

இந்து ஆலய பாதுகாப்பு குழு மாநில பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் கோயில் திருவிழக்களின் போது குறிப்பிட்ட சாதியின் பெயரையோ, சமுதாய குழுக்களில் பெயர்களையோ குறிப்பிட்ட கூடாது என சுற்றரிக்கை அனுப்பட்டுள்ளது. இதன் காரணமாக, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோயில் மற்றும் பாபநாசம் சுவாமி கோயில் பங்குனி திருவிழா அழைப்பிதழில் மண்டகப்படிதாரர்களின் பெயர்கள் அச்சிடப்படாது என செயல் அலுவலர் வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

தவறாக புரிந்துக்கொண்டு சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளது

இந்த நிலையில், அனைத்து கோயில்களும் இந்து சமய அறநிலையத்துறையின் அந்த ஆணையை பின்பற்ற வேண்டும் என்று பொதுவான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என்றும், அதை தவறாக புரிந்துக்கொண்டு ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோயிலில் பல ஆண்டுகளாக உள்ள நடைமுறையை பின்பற்றி பங்குனி திருவிழா அழைப்பிதழில் மண்டகப்படிதாரர்களின் பெயர்களை அச்சிட உத்தரவிட வேண்டும்  என அவர் தனது மனுவில் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.

சுற்றறிக்கைக்கு 4 வார இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (ஏப்ரம் 10, 2025) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு விசாரணை நடத்தியது. இந்த நிலையில், கோயில் திருவிழாக்களில் சாதி பெயரை பயன்படுத்த கூடாது என இந்து சமய அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கைக்கு 4 வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிமதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு குறித்து ஆணையர் பதில் அளிக்க உத்தரவிட்டும் நீதிபதிகள் இந்த வழக்கை ஒத்திவைத்தர்.

இதன் மூலம் இந்த நான்கு வார காலத்தில் தமிழகத்தில் நடைபெறும் கோயில் திருவிழாக்கலில் சாதி பெயர்களை வழக்கம் போல பயன்படுத்துவதற்காக சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்போதுமே சிம்புவின் பின்னால் நிற்பேன்- சந்தானம்!
எப்போதுமே சிம்புவின் பின்னால் நிற்பேன்- சந்தானம்!...
இப்படித்தான் தங்கத்தை டெலிவரி செய்வார்களா? கவனம் பெரும் வீடியோ!
இப்படித்தான் தங்கத்தை டெலிவரி செய்வார்களா? கவனம் பெரும் வீடியோ!...
கவுண்டமணியின் மனைவி மரணம் - நேரில் வந்து ஆறுதல் சொன்ன விஜய்
கவுண்டமணியின் மனைவி மரணம் - நேரில் வந்து ஆறுதல் சொன்ன விஜய்...
ஈரோடு இரட்டைக்கொலை: மூன்று நாட்கள் கழித்து வெளியாகிய கொடூரம்!
ஈரோடு இரட்டைக்கொலை: மூன்று நாட்கள் கழித்து வெளியாகிய கொடூரம்!...
குழந்தையை போல் விளையாடும் புலி - வீடியோ வைரல்!
குழந்தையை போல் விளையாடும் புலி - வீடியோ வைரல்!...
இரத்த சர்க்கரை அளவை குறைக்க 7 சிறந்த உடற்பயிற்சிகள் !
இரத்த சர்க்கரை அளவை குறைக்க 7 சிறந்த உடற்பயிற்சிகள் !...
சுட்டெரிக்கும் வெயில்.. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 5 உணவு!
சுட்டெரிக்கும் வெயில்.. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 5 உணவு!...
மே 5 ஆம் தேதியை "வர்த்தகர்கள் நாள்" ஆக அறிவித்தார் முதல்வர்
மே 5 ஆம் தேதியை
ஒற்றைத் தலைவலியின் ஆரம்ப அறிகுறிகள்... தடுக்க என்ன செய்ய வேண்டும்
ஒற்றைத் தலைவலியின் ஆரம்ப அறிகுறிகள்... தடுக்க என்ன செய்ய வேண்டும்...
ரோலக்ஸ் ரோலில் நடிப்பதற்குக் காரணம் அந்த வெறிதான்- சூர்யா!
ரோலக்ஸ் ரோலில் நடிப்பதற்குக் காரணம் அந்த வெறிதான்- சூர்யா!...
பஹல்காம் தாக்குதல் சம்பவம் - மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு
பஹல்காம் தாக்குதல் சம்பவம் - மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு...