சென்னையில் மட்டும் 39 விமானங்கள் ரத்து… பயணிகள் அவதி – காரணம் என்ன?
IndiGo flight chaos : இண்டிகோ விமான சேவைகள் நாடு முழுவதும் பெருமளவில் முடங்கியுள்ளன. சென்னையில் மட்டும் இதுவரை 39 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதிய பணிநேர விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, விமானிகள் மற்றும் கேபின் குழுவினரின் பற்றாக்குறை இந்த திடீர் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, டிசம்பர் 4 : இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான சேவை நிறுவனமான இண்டிகோ (Indigo), கடந்த சில நாட்களாக கடுமையான செயல்பாட்டு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இதன் விளைவாக, டிசம்பர் 3, 2025 முதல் நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் (Flight) ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் டிசம்பர் 3, 2025 முதல் டிசம்பர் 4, 2025 காலை வரை 39 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதிய பணிநேர விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, விமானிகள் மற்றும் கேபின் குழுவினரின் பற்றாக்குறை இந்த திடீர் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
விமான நிலையங்களில் 14 மணி நேரங்களாக பயணிகள் தவிப்பு
இண்டிகோ சேவை சிக்கல்கள் காரணமாக பல விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர். இண்டிகோ விமான நிறுவனத்திடம் இருந்து உறுதியான தகவல் இல்லாததால் பயணிகள் 12 முதல் 14 மணி நேரம் காத்திருந்தனர். விமானம் புறப்படுவதில் தாமதம் மற்றும் ரத்து செய்யப்பட்டது குறித்த தகவல்கள் பயணிகளுக்கு சரியாக வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிக்க : இந்த 6 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்துவாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!!
இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்த பதிவு
VIDEO | IndiGo is facing nationwide flight delays and cancellations. Visuals from Delhi’s Indira Gandhi International Airport (IGI) show the flight-information display boards amid the disruptions.#DelhiFlights #IndiGo #IGIAirport
(Full video available on PTI Videos –… pic.twitter.com/V49Jb87SUh
— Press Trust of India (@PTI_News) December 4, 2025
சென்னையில் 39 விமானங்கள் ரத்து
சென்னையில் மட்டும் டிசம்பர் 3, 2025 முதல் டிசம்பர் 4, 2025 வ ரை 39 இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பெங்களூருவிலும் இதுவரை 73 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் பயணிகள் விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் விவாதிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.
இதையும் படிக்க : கூடுதலாக 645 காலிப்பணியிடங்கள்… குரூப் 4 தேர்வு எழுதுபவர்களுக்கு குட் நியூஸ் – டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இதனையடுத்து சமூக வலைதளங்களில் பயணிகள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். ஒரு பயணி, புனே முதல் டெல்லி செல்லும் எனது இந்திகோ விமானம் 3.5 மணி நேரம் தாமதமாகி உள்ளது. 12 மணி நேரமாக காத்திருக்கும் பயணிகளும் உள்ளனர்.” என்றார். மற்றொருவர், புனே விமான நிலையத்தில் குழப்பம் நிலவுகிறது. பயணிகளுக்கு எந்த தகவலும் இல்லை. ஊழியர்கள் எவரும் இல்லை. டிஸ்ப்ளே போர்டில் விமானம் நேரத்திற்கு செல்லும் என்று காட்டுகிறது என விமர்சித்தார்.
இந்த நிலையில் இண்டிகோ சுமார் 2,200 விமானங்கள் இயக்கும் இண்டிகோ, எங்கள் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பயணிகளிடம் மன்னிப்பு கோருகிறோம் எனவும் தொழிலநுட்ப கோளாறுகள், மோசமான காலநிலை, புதிய பணிநேர விதிமுறைகள் அமலுக்கு வந்தது ஆகியவை இந்த பிரச்சனைக்கு காரணம் என கூறப்படுகிறது.