அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து.. பயணிகளுக்கு என்னாச்சு? திருவள்ளூரில் பரபரப்பு
Tiruvallur Bus Accident : திருவள்ளூரில் மாவட்டம் பொன்னேரி பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது. இதனை அடுத்து, பேருந்து அந்தரத்தில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பேருந்து விபத்து
திருவள்ளூர், ஆகஸ்ட் 24 : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழுந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது (Tiruvallur Bus Accident). ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருநது, தடுப்பு சுவரில் மோதி, வயல் வெளி பகுதியில் அந்தரத்தில் தொங்கி நின்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சாலை விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே, சாலை விபத்துகளை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், விபத்துகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூரில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழுந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து
அதாவது, பென்னேரி பணிமனையில் இருந்து தடம் எண் டி40 என்ற அரசுப் பேருந்து மீஞ்சூர், காட்டூர், தந்தைமஞ்சி வழியாக சென்று, மீண்டும் பொன்னேரிக்கு வந்தடையும். இந்த பேருந்து காலை முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வழக்கம்போல், 2025 ஆகஸ்ட் 23ஆம் தேதியான நேற்று காலை 10 மணியளவில் பொன்னேரியில் இருந்து பேருந்து புறப்பட்டது.
Also Read : மின்னல் தாக்கி அக்காள் தங்கை உயிரிழப்பு.. ராமநாதபுரத்தில் சோகம்..
இந்த பேருந்து காட்டூரில் இருந்து தத்தைமஞ்சி நோக்கி வந்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்தில் சிக்கியது. பேருந்து ஏரிக்கரை தடுப்புச் சுவரில் சிக்கி முன்பக்க டயர் வயல்வெளியிலும், மறுபுறம் சாலையிலும் என அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பயணிகளுக்கு என்னாச்சு?
இதற்கிடையில், ஓட்டுநர், நடத்துனர், அதில் இருந்த 8 பயணிகள் அலறி அ0த்து பேருந்தின் பின்புறம் வழியாக இறங்கினர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பேருந்தை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
பேருந்தின் முன் சக்கர பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, போலீசார் பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த பேருந்து விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.