Train Cancelled : சென்னை பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து!

Electric Trains Cancelled in Chennai | சென்னையை பொருத்தவரை பெரும்பாலான பொதுமக்கள் மின்சார ரயில் போக்குவரத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். இந்த நிலையில், நாளை (ஜூன் 19, 2025) சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நிலையில், எந்த வழித்தடத்தில் எந்த எந்த ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Train Cancelled : சென்னை பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து!

மாதிரி புகைப்படம்

Updated On: 

18 Jun 2025 07:01 AM

 IST

சென்னை, ஜூன் 18 : சென்னை சென்ட்ரல் (Chennai Central) – கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை – கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூன் 19, 2025) மின்சார ரயில்கள் ரத்து (Electric Trains Cancel) செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது. நாளை சில குறிப்பிட்ட நேரங்களில் ரயில்கள் ரத்து செய்யபப்டுவதாக  தெற்கு ரயில்வே தனது அறிக்கையில் கூறியுள்ளது. இந்த நிலையில், மின்சார ரயில்கள் ரத்து குறித்து தெற்கு ரயில்வே கூறியுள்ளது என்ன, எந்த எந்த நேரங்களில், எந்த எந்த வழித்தடங்களில் ரயில்கள் ரத்து செய்யபப்டுகின்றன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படும் மின்சார ரயில்கள்

சென்னையை பொருத்தவரை ஆயிரக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தையே நம்பியுள்ளனர். சென்னையின் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு இடத்தில் ஒருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மிக நீண்ட நேரம் ஆகும் என்பதாலும், மிக குறைந்த விலையில், விரைவாகவும் வேகமாகவும் பயணிக்க முடியும் என்பதால் மின்சார ரயில்கள் பலரின் தேர்வாக உள்ளது. இவ்வாறு சென்னை பொதுமக்களின் வாழ்வில் மின்சார ரயில்கள் பெரும் பங்கு வகிக்கும் நிலையில், நாளை (ஜூன் 19, 2025) ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தெற்கு ரயில்வே, சென்னை சென்ட்ரல் கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை – கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூன் 19, 2025) மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதன் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை காலை 8, 8.35, 9, 9.30, 10.30 மதியம் 11.35, 12.10, 1.5 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டையில் இருந்து காலை 9.55, 11.25, 11.45 மதியம் 12, 1, 2.30, 1.15, 3.10, 3.15 மற்றும் இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.40, மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை