Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

லாக்கப் மரணங்களை எதிர்த்து தமிழகத்தில் தேமுதிக தரப்பில் போராட்டம் – விஜய பிரபாகரன்..

DMDK Protest: தமிழகத்தில் அதிகரித்து வரும் லாக்கப் மரணங்களை கண்டிக்கும் விதமாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் தரப்பில் ஜூலை 5, 2025 தேதியான இன்று மாபெரும் கண்டன போராட்டம் நடத்தப்படும் என தேமுதிக இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

லாக்கப் மரணங்களை எதிர்த்து தமிழகத்தில் தேமுதிக தரப்பில் போராட்டம் – விஜய பிரபாகரன்..
விஜய பிரபாகரன்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Jul 2025 08:01 AM

சென்னை, ஜூலை 5, 2025: தமிழகத்தில் அதிகரித்து வரும், லாக்கப் மரணங்களை எதிர்த்து தேமுதிக தரப்பில் கண்டன போராட்டம் நடத்தப்படும் என தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோயில் காவலாளி போலீசார் விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் பெறும் பேசு பொருளாக மாறி உள்ளது. நகை திருட்டு வழக்கில் 27 வயதான அஜித்குமார் காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின் போது அவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த கொடூரமான கொலையை தொடர்ந்து ஆறு காவல்துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதேபோல் இந்த வழக்கு விசாரணை என்பது சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்:

இளைஞர் அஜித்குமாரின் உடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் இருப்பதாகவும், மூளையில் ரத்தக்கசிவு இரண்டு இடங்களில் ஏற்பட்டுள்ளதாகவும், இதயத்தில் ஒரு இடத்தில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், வலது கையில் மூன்று இடங்களில் சூடு வைத்த தடையங்கள் இருப்பதாகவும் பிரேத பரிசோதனை முடிவுகளில் வெளியானது. அஜித் குமாரின் உயிர் இழப்பிற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். குறிப்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய எதிர்க்கட்சிகள் தரப்பில் இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அஜித் குமாரின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

தேமுதிக முன்னெடுக்கும் போராட்டம்:

இந்த நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தரப்பில் ஜூலை 5 2025 தேதியான இன்று தமிழகத்தில் நிகழக்கூடிய லாக்கப் மரணங்களை கண்டிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ”தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனை கண்டிக்கும் விதமாக ஜூலை 5 2025 ஆம் தேதி தேமுதிக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற. உள்ளது சட்டம் ஒழுங்கை கைவசம் வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இது போன்ற குற்றங்கள் நடைபெறுவதை தடுப்பதில் கவனம் செலுத்தாமல் உயிர் பறிபோன பின்பு நேரில் சென்று பார்ப்பதும் தொலைபேசி மூலமாக பேசி ஆறுதல் கூறுவதும் பழைய காட்சியாகவே பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

த.வெ.க போராட்டத்தை தள்ளி வைக்க அறிவுறுத்தல்:

இதற்கு முன்னதாக தமிழக வெற்றி கழகம் தரப்பில் சிவகங்கை மடப்புரம் இளைஞர் அஜித்குமாரின் மரணத்தை தொடர்ந்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறையினர் அனுமதி கொடுக்காத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை வந்த பொழுது நீதிபதி இதற்கு என்ன அவசரம் என்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் எனவும் குறிப்பிட்டு ஆர்ப்பாட்டத்தை தள்ளி வைக்கும் படியும் அறிவுறுத்தினார்.