“முழு பணத்தை கொடுத்தும் கிடைக்காத பைக்!” – நுகர்வோர் புகாருக்கு ரூ.1.64 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பு!!

இ-பைக் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் முழு பணத்தையும் கட்டி, 10 நாட்களில் வாகனம் வந்துவிடும் என மகிழ்ச்சியுடன் காத்திருந்த வாடிக்கயாளர்களுக்கு பெரும் ஏமாற்றம் கிடைத்துள்ளது. தொடர்ந்து, ஏமாற்றத்துடன் தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றம் சென்று அந்த வாடிக்கையாளர் வெற்றி பெற்றுள்ளார்.

“முழு பணத்தை கொடுத்தும் கிடைக்காத பைக்!” – நுகர்வோர் புகாருக்கு ரூ.1.64 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பு!!

மாதிரிப்படம்

Updated On: 

23 Nov 2025 08:29 AM

 IST

தூத்துக்குடி, நவம்பர் 22: தூத்துக்குடி அருகே முழு பணம் செலுத்தி பைக் புக் செய்தவருக்கு, வாகனத்தை வழங்காமல் அலைக்கழித்த நிறுவனத்திற்கு எதிராக, நுகர்வோர் நீதிமன்றம் சென்று வாடிக்கையாளர் நீதி பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்தவர் அருண்சக்திவேல். இவர், திருச்செந்தூர் குமாரபுரத்தில் செயல்படும் ஒரு எலெக்ட்ரிக் பைக் நிறுவனத்தில், புதிய மின்சார பைக் வாங்க முடிவு செய்துள்ளார். இதையொட்டி, அந்த பைக் ஷோரூமிற்கு நேரில் சென்று பைக்கை ஓட்டிப் பார்த்து, அது பிடித்துப்போகவே உடனடியாக முன்பதிவும் செய்துள்ளார். இதற்காக, வாகனத்திற்கான முழுத்தொகையான ரூ.1,04,235-ஐ அவர் அந்த பைக் நிறுவனத்திற்கு மொத்தமாக ஒரே பேமெண்டடாக செலுத்தியுள்ளார். தொடர்ந்து, புக்கிங் செய்ததில் இருந்து 10 நாட்களில் பைக் டெலிவரி செய்யப்படும் என்று நிறுவனம் அவரிடம் உறுதியளித்துள்ளது. இதனால், அருண்சக்திவேல் அங்கிருந்து நம்பிக்கையுடனும், புதிய பைக் வரப்போகிறது என்ற மகிழ்ச்சியுடனும் அங்கிருந்து சென்றுள்ளார்.

இதையும் படிக்க : தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

பைக் புக்கிங் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி:

பைக் நிறுவனம் கூறிய 10 நாட்கள் காலக்கெடு கடந்தும், வாகனம் அருணிடம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஒவ்வரொ முறை பைக் நிறுவனத்திடம் சென்று கேட்கும்போதும், இப்போது வந்துவிடும், ஒருவாரத்தில் வந்துவிடும் என அந்நிறுவன ஊழியர்கள் கூறி வந்துள்ளனர். இதனை நம்பி அவரும் காத்திருந்து வந்துள்ளார். இப்படியே சுமார் மூன்று மாதங்களும் கடக்கவே ஒருநாள், அருண்சக்திவேலின் மொபைல் எண்ணுக்கு “வாகனம் விநியோகத்துக்கு தயாராக உள்ளது” என்ற குறுஞ்செய்தி வந்தது.

இதைத்தொடர்ந்து, வாகனம் வந்துவிட்டதாக நினைத்து மகிழ்ச்சியுடன் அவர் நிறுவனத்தை தொடர்புகொண்டுள்ளார். அப்போது, அந்த வாகனம் தவறுதலாக வேறு ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று பைக் நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக அருண்சக்திவேல் வேறு வழியின்றி தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்பு:

இந்த வழக்கை நுகர்வோர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் விசாரித்தனர். இதன் விசாரணையின் முடிவில், நிறுவனத்தின் தவறால் நுகர்வோர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதாகவும், அதற்காக நிறுவனம் கீழ்க்காணும் தொகைகளை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையும் படிக்க : எய்ம்ஸ் வராது… மெட்ரோவையும் வரவிட மாட்டோம்…. மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

ரூ.1.64 லட்சம் இழப்பீடு வழக்க உத்தரவு:

அதன்படி, பைக் வாங்க அருண்சக்திவேல் செலுத்திய தொகை ரூ.1,04,235, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கான நஷ்டஈடாக ரூ.50,000 மற்றும் வழக்கு செலவுக்கு ரூ.10,000 சேர்த்து மொத்தமாக ரூ.1,64,235 செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மேலும், இந்த தொகையை 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டது. காலக்கெடு மீறப்படின், தொகை செலுத்தப்படும் தேதி வரை வருடத்திற்கு 9% வட்டி சேர்த்தும் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

TRAI இன் புதிய 160 எண்.. இதன் சாராம்சம் என்ன?
திரிஷ்யம் 3 படம் இப்படி தான் இருக்கும்.. மனம் திறந்த ஜித்து ஜோசப்..
15,000 கி.மீ பயணித்த மாரிச் கழுகு
திறமையான வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவை... டிரம்ப்பின் முரணான பேச்சால் அமெரிக்கர்கள் அதிர்ச்சி