குளு குளுவென மாறிய சென்னை.. இரவு முழுவதும் மழை தொடரும் – பிரதீப் ஜான்..

Chennai Rain Alert: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பதிவு இருந்து வரும் நிலையில், சென்னையில் இன்று (ஆகஸ்ட் 17, 2025) மாலை முதல் நகரின் அனேக பகுதிகளில் கனமழை பதிவாகி வருகிறது. இந்த மழை தொடரும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

குளு குளுவென மாறிய சென்னை.. இரவு முழுவதும் மழை தொடரும் - பிரதீப் ஜான்..

கோப்பு புகைப்படம்

Published: 

17 Aug 2025 22:00 PM

வானிலை நிலவரம், ஆகஸ்ட் 17, 2025: தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கேரளா கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்தில் கோவை நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பதிவாகி வருகிறது. இதே போல் வெப்ப சலனம் காரணமாக மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் அவ்வப்போது லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் ஆகஸ்ட் 17 2025 தேதியான இன்று நகரின் பல்வேறு பகுதிகளில் மாலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை ஆகஸ்ட் 18 2025 தேதியான நாளை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.. இவர் கடந்து வந்த பாதை என்ன?

சென்னையில் கனமழை:

இந்த நிலையில் சென்னையில் மாலை முதல் நகரின் அநேக பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பதிவாகி வருகிறது. குறிப்பாக சென்னை தேனாம்பேட்டை, அண்ணா சாலை, கோபாலபுரம், ராதாகிருஷ்ணன் சாலை, பட்டினப்பாக்கம், மெரினா கடற்கரை பகுதி, காமராஜர் சாலை, அடையாறு, கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, மேடவாக்கம் என அநேக பகுதிகளில் மாலை முதல் மழை பெய்து வருகிறது. ஆகஸ்ட் 16 2025 தேதியான நேற்றும் இரவு முதல் சென்னையில் அனேக பகுதிகளில் விட்டுவிட்டு மழை பதிவு இருந்து வந்தது.

மேலும் படிக்க: மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நாளை முதல் போராட்டம்.. என்னென்ன கோரிக்கைகள்?

இரவு முழுவதும் மழை தொடரும் – பிரதீப் ஜான்:


சென்னையின் தொடர் மழை காரணமாக வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது அதிகபட்ச வெப்பநிலை என்பது 34 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 17, 2025) இரவு முழுவதும் சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் புதுச்சேரி மற்றும் கடலூரிளும் ஒரு சில பகுதிகளில் மழை இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.