சென்னையில் 102 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

Chennai Will Have Heat Wave with 102 Degree Celsius | தமிழகத்தில் கத்தரி வெயில் தொடங்கியுள்ளதால் வெயிலின் தாக்க மிக தீவிரமாக உள்ளது. இந்த நிலையில், இன்று ( மே 12, 2025) சில பகுதிகளில் மழை பொழியும் என்றும் சில பகுதிகளில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் 102 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

12 May 2025 07:04 AM

சென்னை, மே 12 : சென்னையில் இன்று ( மே 12, 2025) வெயில் சுட்டெரிக்கும் என்றும் அதே சமயம் சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பொழியும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கத்தரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் மிக தீவுரமாக உள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் சில இடங்களில் மழை பொழியும் என்றும் சில இடங்களில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் அதிக வெப்பம் மற்றும் மழை

தமிழகத்தில் மே 5, 2025 முதல் கத்தரி வெயில் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. சில இடங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெப்பநிலை நிலவுவதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையை பொருத்தவரை நேற்று ( மே 11, 2025) பகல் நேரங்களில் ஒரு சில பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிக தீவிரமாக இருந்த நிலையில், சில இடங்களில் மழை பொழிந்தது. அந்த வகையில் இன்றும் ( மே 12, 2025) ஒருசில இடங்களில் மழை பொழியும் என்றும் அதே சமயம் வெப்பநிலை 102 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மழை நிலவரம்

நாளை ( மே 13, 2025) தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மே 14, 2025 மற்றும் மே 15, 2025 ஆகிய தேதிகளில் மேற்கு மண்டல மாவட்டங்களான நாமக்கல், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெப்பநிலையை பொருத்தவரை மே 13, 2025 வரை இயல்பு நிலையில் இருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தொடர்ந்து கடும் வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், சில இடங்களில் மழை பெய்து வருவதால் சற்று குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது குறிப்பிடத்தக்கது.