Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. வெளியான முக்கிய அறிவிப்பு!

Chennai Metro Rail : சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு 2025 ஏப்ரல் 14ஆம் தேதியான நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 2025 ஏப்ரல் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும்.

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. வெளியான முக்கிய அறிவிப்பு!
சென்னை மெட்ரோ ரயில்Image Source: X
umabarkavi-k
Umabarkavi K | Published: 13 Apr 2025 06:38 AM

 சென்னை, ஏப்ரல் 13: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (Tamil New Year), சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் (Chennai Metro Train) செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2025 ஏப்ரல் 14ஆம் தேதி ஞாயிற்றுகிழமை அட்டவணைப்படி மெட்ரே ரயில்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அதற்கு ஏற்ப தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மெட்ரோ ரயில் சேவை. மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

போக்குவரத்து நெரிசல், காலதாமதம் ஏற்படாமல் விரைவாக செல்வதால் மெட்ரோ ரயில்கள் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பயணிகளின் வருகைகாக மெட்ரோ ரயில் நிர்வாகமும் பல்வேறு சிறப்பு சலுகைகளையும் அறிவித்து வருகிறது.

தற்போது இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையம், சைதாப்பேட்டை, நந்தம் வழியாக ஒரு வழித்தடமும், சென்டரில் இருந்து கோயம்பேடு, ஆலந்துரை அடையும் வழியில் மற்றொரு வழித்தடமும் உள்ளது.

இந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதில் மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் கிட்டதட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

வெளியான முக்கிய அறிவிப்பு

இந்த நிலையில், மெட்ரோ ரயில் சேவைகளில் அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. பண்டிகை நாட்களில் கூட்டம் அதிகமாக இல்லாததால் இந்த மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025 ஏப்ரல் 14ஆம் தேதி (நாளை) தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

இதனால், சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  அதாவது, 2025 ஏப்ரல் 14ஆம் தேதி ஞாயிற்று கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி, சென்னை மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை ஒவ்வொரு ஏழு நிமிடங்களுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டம் இல்லாத நேரமான இரவு 10 முதல் 11 மணி வரை ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படும்  என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையில், 2025 மார்ச் மாதத்தில் மட்டும் 92.10 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா பதிலடி சரியே! பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானி குரல்..!
இந்தியா பதிலடி சரியே! பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானி குரல்..!...
ஆர்ஆர்ஆர் பட விழாவில் ரசிகர்களால் கடுப்பான ஜூனியர் என்டிஆர்
ஆர்ஆர்ஆர் பட விழாவில் ரசிகர்களால் கடுப்பான ஜூனியர் என்டிஆர்...
அடிச்சது யோகம்.. இந்த 6 ராசிக்கு சொந்த வீடு கனவு நிறைவேறும்!
அடிச்சது யோகம்.. இந்த 6 ராசிக்கு சொந்த வீடு கனவு நிறைவேறும்!...
நவகைலாய தலங்கள்.. பாவம் தீர்க்கும் பாபநாதர் சுவாமி திருக்கோயில்!
நவகைலாய தலங்கள்.. பாவம் தீர்க்கும் பாபநாதர் சுவாமி திருக்கோயில்!...
20 நாட்களுக்கு பிறகு இந்தியாவிடம் ஒப்படைக்க ராணுவ வீரர்
20 நாட்களுக்கு பிறகு இந்தியாவிடம் ஒப்படைக்க ராணுவ வீரர்...
2 குழந்தைகளை கொன்ற பெற்றோர்.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு!
2 குழந்தைகளை கொன்ற பெற்றோர்.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு!...
பிரதீப் ரங்கநாதனின் ’டியூட்’ படத்தின் டைட்டில் என்னுடையது...
பிரதீப் ரங்கநாதனின் ’டியூட்’ படத்தின் டைட்டில் என்னுடையது......
இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் - அதிபர் டிரம்ப்
இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் - அதிபர் டிரம்ப்...
ஐபிஎல்லில் இந்த வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவது டவுட்! லிஸ்ட் இதோ
ஐபிஎல்லில் இந்த வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவது டவுட்! லிஸ்ட் இதோ...
"ஒன்றாக டின்னர் சாப்பிடுங்க" டிரம்ப் சொன்ன விஷயம்
திருநெல்வேலியில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!
திருநெல்வேலியில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!...