தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. நீலகிரியில் உறைபனி இருக்கும் – வானிலை ரிப்போர்ட் இதோ..

Tamil Nadu Weather Update: வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்துள்ள சூழலில், அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக, டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. நீலகிரியில் உறைபனி இருக்கும் - வானிலை ரிப்போர்ட் இதோ..

கோப்பு புகைப்படம்

Updated On: 

22 Dec 2025 13:34 PM

 IST

வானிலை நிலவரம், டிசம்பர் 22, 2025: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில் வறண்ட வானிலையே நிலவி வந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பூமத்திய ரேகைப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவி வருகிறது. இதன் காரணமாக, டிசம்பர் 22 தேதியான இன்றும், டிசம்பர் 23 தேதியான நாளையும் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் எனவும், அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

தற்போது வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்துள்ள சூழலில், அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக, டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும், அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “பொறாமையால் பாதிக்கப்பட்ட இளைஞன்”.. குட்டி கதை சொன்ன விஜய்

அதேபோல், டிசம்பர் 26 அன்று டெல்டா மாவட்டங்கள், தென் தமிழகப் பகுதிகள் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய தமிழகப் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலை வரக்கூடிய டிசம்பர் 28, 2025 வரை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்பு:

தமிழகத்தில் மழையின் தீவிரம் குறைந்து காணப்படும் சூழலில், குறைந்தபட்ச வெப்பநிலை அளவில் வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதாவது, இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைப்பனி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தவெக குறித்த கேள்வி…விமர்சிக்க மறுத்த எடப்பாடி பழனிசாமி!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் பகல் நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

யூடியூபர் வீட்டில் சிக்கிய விலையுயர்ந்த கார்கள் - அமலாக்கத்துறை தீவிர விசாரணை
துணிச்சலாக செயல்பட்டு பலரின் உயிரைக் காப்பாற்றிய நபர் - ரூ.14 கோடி நிதியுதவி
சமந்தாவின் புத்தாண்டு தீர்மானங்கள் என்ன தெரியுமா?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான பெயர் பரிந்துரை