வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
Tamil Nadu Rain Alert: வருகின்ற 25, ஆகஸ்ட் 2025 அன்று வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், ஆகஸ்ட் 23, 2025: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், 25 ஆகஸ்ட் 2025 அன்று, ஒடிசா – மேற்கு வங்கக் கடலோர பகுதிகளுக்கு அப்பால், வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 23, 2025 அன்று, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆகஸ்ட் 24, 2025 முதல் ஆகஸ்ட் 29, 2025 வரை, தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையில் தொடரும் மழை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் (சென்னை), மண்டலம் 05 பாரிமுனை (சென்னை) தலா 17, மண்டலம் 14 மடிப்பாக்கம் (சென்னை) 15, எண்ணூர் AWS (திருவள்ளூர்), ஆற்காடு (ராணிப்பேட்டை), மண்டலம் 07 கொரட்டூர் (சென்னை), மண்டலம் 11 நெற்குன்றம் (சென்னை) தலா 14, சோழவரம் (திருவள்ளூர்), திருத்தணி (திருவள்ளூர்) தலா 13, திருவள்ளூர் (திருவள்ளூர்), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை), செம்பரம்பாக்கம்-REV (திருவள்ளூர்), மண்டலம் 15 ஒக்கியம் தொரபாக்கம் (சென்னை) தலா 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் கனமழை தொடருமா? டெல்டாவுக்கு முக்கிய அலர்ட்.. வெதர்மேன் அப்டேட்!
மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு, சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை குறைந்துள்ளது; அதாவது, 32 டிகிரி செல்சியஸ் ஒட்டிப் பதிவாகி வருகிறது.
மேலும் படிக்க: தர்மஸ்தலா வழக்கில் திடீர் திருப்பம்.. பெண்களை புதைத்தாக புகார் அளித்தவர் கைது.. ஷாக் பின்னணி!
குறையும் வெப்பநிலை:
அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதனைத் தொடர்ந்து, மதுரையில் 36 டிகிரி செல்சியஸ், வேலூரில் 35 டிகிரி செல்சியஸ் பதிவானது. சென்னைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 34.5 டிகிரி செல்சியஸ், நுங்கம்பாக்கத்தில் 33.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.