Bomb Threat: நடிகர் ரஜினி, தனுஷ் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர கண்காணிப்பில் காவல்துறை!

Rajinikanth and Dhanush's residence under Bomb Threat: நடிகர் ரஜினிகாந்த் வீட்டை தவிர, மெயிலில் குறிப்பிடப்பட்ட மற்றவர்களின் வீடுகளையும் காவல் குழுவும் பிடிடிஎஸ் குழுவும் சோதனை செய்தபோது, இந்த மிட்டல்கள் ஒரு புரளி என்று கண்டறிந்து தெரிவித்தனர். இதேபோல், கீழ்ப்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் வீட்டிலும் உளவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Bomb Threat: நடிகர் ரஜினி, தனுஷ் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர கண்காணிப்பில் காவல்துறை!

ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Published: 

28 Oct 2025 16:48 PM

 IST

கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் பல முக்கிய பிரபலஙக்ளின் வீடுகளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் (TVK Vijay), நடிகை திரிசா, நடிகை நயன்தாரா (Nayanthara) உள்ளிட்டோர் வீடுகளில் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இந்தநிலையில், நேற்று அதாவது 2025 அக்டோபர் 28ம் தேதி மாலை சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், நடிகர் தனுஷ் மற்றும் சென்னை உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டதாக கூறி அடையாளம் தெரியாத சில நபர்கள் மெயில் அனுப்பியுள்ளனர்.

ALSO READ: ப்ரோ கோட் பெயரைப் பயன்படுத்த ரவி மோகனுக்கு தடை – டெல்லி உயர் நீதிமன்றம்

மெயில் எப்போது, யாருக்கு அனுப்பப்பட்டது..?

நடிகர்கள் ரஜினி காந்த், தனுஷ், செல்வபெருந்தகை ஆகியோர் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக அனுப்பப்பட்ட மெயில்கள் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரின் (டிஜிபி) அதிகாரப்பூர்வ மெயில் ஐடிக்கு அனுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து, இவை அடுத்தக்கட்ட விசாரணைக்காக சென்னை நகர காவல்துறைக்கு அனுப்பப்பட்டன. இதனையடுத்து, 2025 அக்டோபர் 27ம் தேதியான நேற்று மாலை தேனாம்பேட்டை காவல்துறையினர் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க செய்யும் படையினருடன் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டிற்கு பாதுகாப்பு சோதனைக்காக சென்றனர். இருப்பினும், நடிகரின் பாதுகாப்பு பணியாளர்கள், அடையாளம் தெரியாத நபர்கள் யாரும் வெடிபொருட்கள் வைக்க வீட்டிற்குள் நுழையவில்லை என்று தெரிவித்தனர். எனவே, இந்த மிரட்டல் ஒரு வதந்தியாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் வீட்டை தவிர, மெயிலில் குறிப்பிடப்பட்ட மற்றவர்களின் வீடுகளையும் காவல் குழுவும் பிடிடிஎஸ் குழுவும் சோதனை செய்தபோது, இந்த மிட்டல்கள் ஒரு புரளி என்று கண்டறிந்து தெரிவித்தனர். இதேபோல், கீழ்ப்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் வீட்டிலும் உளவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நீண்ட தேடுதலின்போது வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இதுவும் வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என்பதை உறுதிப்படுத்தினர். இருப்புனும், காவல்துறையினர் இதை மிகவும் தீவிரமாக எடுத்து கொண்டு, மிரட்டல் மெயில் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ALSO READ: வாய் பேச முடியாத ரசிகரின் வேண்டுகோள்.. சிரித்தபடி செய்துகொடுத்த அஜித்.. வைரல் வீடியோ

அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்:


தமிழ்நாட்டில் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்களின் வீடுகளை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்படுகிறது. விஜய், நயன்தாரா, திரிஷா மற்றும் பல சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படது. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பி அச்சத்தை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.