Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Edappadi Palaniswami Tour: எடப்பாடி பழனிசாமிக்கு 10 இடங்கள் கூட கிடைக்காது.. கடுமையாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி!

2026 Tamil Nadu Election: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜூலை 7 முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். "மக்களை காப்போம், தமிழ்நாட்டை மீட்போம்" என்ற பிரச்சாரத்தின் முதல் கட்டமாக 34 தொகுதிகளுக்குச் செல்ல உள்ளார். இந்தப் பயணத்தின் நோக்கம், ஆளும் அரசின் தோல்விகளை எடுத்துரைத்து அதிமுகவிற்கு ஆதரவு திரட்டுவது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எடப்பாடிக்கு 10 இடங்கள்கூட கிடைக்காது என பெங்களூரு புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

Edappadi Palaniswami Tour: எடப்பாடி பழனிசாமிக்கு 10 இடங்கள் கூட கிடைக்காது.. கடுமையாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி!
எடப்பாடி பழனிசாமி - பெங்களூரு புகழேந்திImage Source: Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Published: 06 Jul 2025 20:22 PM

தஞ்சாவூர், ஜூலை 6: 2026 சட்டமன்ற தேர்தலை (2026 Tamil Nadu Election) முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) வருகின்ற 2025 ஜூலை 7ம் தேதி (நாளை) முதல் கோவையில் இருந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி, “மக்களை காப்போம் தமிழ்நாட்டை மீட்போம்” என்ற பிரச்சாரத்தின் முதல் கட்டமாக எடப்பாடி பழனிசாமி 34 சட்டமன்ற தொகுதிகளுக்கு செல்ல இருக்கிறார். 2025 ஜூலை 7 முதல் 21ம் தேதி வரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கும்பகோணத்தில் மாநகராட்சியின் திறமையற்ற நிர்வாகத்தை கண்டித்து 2025 ஜூலை 7ம் தேதி போராட்டம் நடத்தப்போவதாகவும் அதிமுக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமியால் 2026 சட்டமன்ற தேர்தலில் 10 இடங்களை கூட பிடிக்க முடியாது என பெங்களூரு புகழேந்தி (Bengaluru Pugazhendhi) தெரிவித்துள்ளார்.

பெங்களூரு புகழேந்தி விமர்சனம்:

தஞ்சாவூரில் முன்னாள் அதிமுக நிர்வாகி பெங்களூரு புகழேந்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் குறித்து பேசுகையில், “தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணியால் 10 இடங்களைக் கூட பிடிக்க முடியாது. நாளை அதாவது 2025 ஜூலை 7ம் தேதி முதல் பிரசாரத்தை மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, தனது கொடியில் உள்ள அறிஞர் அண்ணாவின் புகைப்படத்தை நீக்கிவிட்டு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையோ, பிரதமர் நரேந்திர மோடியையோ போட்டுக்கொள்ள வேண்டும். பிரச்சாரத்தில் ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் கொள்கையை சொல்லப் போகிறாரா?

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அன்வர் ராஜா கூட்டணி பேசும்போது எங்கே சென்றார்? இவ்வளவு நாட்கள் எங்கே சென்றார்? அன்வர் ராஜாவை தூண்டிவிட்டு பேச வைத்தது எடப்பாடி பழனிச்சாமிதான்.

அறிஞர் அண்ணா, பெரியார் போன்ற திராவிட இயக்கத் தலைவர்களை அசிங்கப்படுத்திய, அவமானப்படுத்திய பாஜக கட்சிக்குப் பின்னால் செல்வது அசிங்கமாக இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்:

இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, ஆளும் திராவிட முன்னேற்ற கழக அரசின் தோல்விகளை எடுத்துரைப்பதன் மூலமும், அதிமுகவிற்கு ஆதரவை திரட்டும் நோக்கத்திலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்ல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தின்போது, தமிழ்நாடு தழுவிய சுற்றுப்பயணத்திற்கான திட்டங்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பல்வேறு காரணங்களால் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் தாமதமானது. கடந்த 2025 ஜூன் 24 மற்றும் ஜூன் 25 ஆகிய தேசிகலில் அதிமுக கட்சி மாவட்ட செயலாளர்களுடன் அதிமுகவின் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயண தேதிகளை அறிவித்தார்.