Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அண்ணாமலையுடன், ஆடிட்டர் குருமூர்த்தி திடீர் சந்திப்பு.. அமித்ஷா வருகைக்கு முன்னதாக ஆலோசனை!

Annamalai and Auditor Gurumurthy Meeting | பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அண்ணாமலையுடன் ஆடிட்டர் குருமூர்த்தி ஆலோசனை மேற்கொண்டு வருவது கவனம் பெற்றுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழகம் வரும் நிலையில், தமிழக பாஜக பரபரப்பாக காணப்படுகிறது.

அண்ணாமலையுடன், ஆடிட்டர் குருமூர்த்தி திடீர் சந்திப்பு.. அமித்ஷா வருகைக்கு முன்னதாக ஆலோசனை!
அண்ணாமலை மற்றும் குருமூர்த்தி
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 11 Apr 2025 07:41 AM

சென்னை, ஏப்ரல் 10 : தமிழக பாரதிய ஜனதா கட்சி (BJP – Bharatiya Janata Party) தலைவர் அண்ணாமலையுடன் ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Home Minister Amit Shah) தமிழகம் வரும் நிலையில், இருவரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இவர்களின் சந்திப்பு அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், இவர்களின் சந்திப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாஜக மாநில தலைவர் மாற்றம் – பரபரப்பாக காணப்படும் அரசியல் களம்

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் மிகவும் பரபரப்புடன் காணப்படுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பாஜக மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக பாஜக தலைவரை மாற்றம் செய்வது குறித்து அந்த கட்சி ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது. அதுமட்டுமன்றி, தற்போது பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை விரைவில் மாற்றம் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

தமிழகம் வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா

பாஜக மாநில தலைவர் மாற்றம் குறித்த தகவல் தீயாக பரவி வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாற்றம் தொடர்பான தகவல்கள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமித்ஷாவின் வருகை அதனை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. இதன் மூலம் தமிழக பாஜக தலைவர் மாற்றம் குறித்த முக்கிய தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆடிட்டர் குருமூர்த்தி உடன் திடீர் ஆலோசனை மேற்கொண்ட அண்ணாமலை

இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வர உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இன்று (ஏப்ரல் 10, 2025) பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள குருமூர்த்தியின் இல்லத்தில் அவரை சந்தித்து பேசினார். அவர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இவர்களின் இந்த ஆலோசனை மூலம் தமிழக பாஜக தலைவர் மாற்றம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்ட 3 முக்கிய அம்சங்கள்!
வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்ட 3 முக்கிய அம்சங்கள்!...
இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை பார்த்திருக்கிறீர்களா?
இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை பார்த்திருக்கிறீர்களா?...
18 வருட ஐபிஎல்லில் இது முதல் முறை! புது சாதனை படைத்த கம்மின்ஸ்!
18 வருட ஐபிஎல்லில் இது முதல் முறை! புது சாதனை படைத்த கம்மின்ஸ்!...
எப்போதுமே சிம்புவின் பின்னால் நிற்பேன்- சந்தானம்!
எப்போதுமே சிம்புவின் பின்னால் நிற்பேன்- சந்தானம்!...
இப்படித்தான் தங்கத்தை டெலிவரி செய்வார்களா? கவனம் பெரும் வீடியோ!
இப்படித்தான் தங்கத்தை டெலிவரி செய்வார்களா? கவனம் பெரும் வீடியோ!...
கவுண்டமணியின் மனைவி மரணம் - நேரில் வந்து ஆறுதல் சொன்ன விஜய்
கவுண்டமணியின் மனைவி மரணம் - நேரில் வந்து ஆறுதல் சொன்ன விஜய்...
ஈரோடு இரட்டைக்கொலை: மூன்று நாட்கள் கழித்து வெளியாகிய கொடூரம்!
ஈரோடு இரட்டைக்கொலை: மூன்று நாட்கள் கழித்து வெளியாகிய கொடூரம்!...
குழந்தையை போல் விளையாடும் புலி - வீடியோ வைரல்!
குழந்தையை போல் விளையாடும் புலி - வீடியோ வைரல்!...
இரத்த சர்க்கரை அளவை குறைக்க 7 சிறந்த உடற்பயிற்சிகள் !
இரத்த சர்க்கரை அளவை குறைக்க 7 சிறந்த உடற்பயிற்சிகள் !...
சுட்டெரிக்கும் வெயில்.. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 5 உணவு!
சுட்டெரிக்கும் வெயில்.. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 5 உணவு!...
மே 5 ஆம் தேதியை "வர்த்தகர்கள் நாள்" ஆக அறிவித்தார் முதல்வர்
மே 5 ஆம் தேதியை