Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

“நானே தலைவர்” அன்புமணிக்கு ஆப்பு.. ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு!

PMK Ramadoss : பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக நானே செய்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். அதே நேரத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் செய்ல தலைவராக  அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.  இதனால், பாட்டாளி மக்கள் கட்சியில் சலசலப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

“நானே தலைவர்” அன்புமணிக்கு ஆப்பு.. ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு!
அன்புமணி - ராமதாஸ்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 10 Apr 2025 12:06 PM

சென்னை, ஏப்ரல் 10: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தானே செய்பட உள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அதே நேரத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் செய்ல தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்படுவதாகவும் அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளாார். தேர்தல் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தான் சட்டமன்றத்திற்கோ நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.

அன்புமணிக்கு ஆப்பு

பதவி பெறும் ஆசை தனக்கு இல்லை எனவும் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். மேலும், நான் தலைவராக பொறுப்பேற்றதற்கு பல உண்டு என்றும் எல்லாவற்றையும் உங்களிடம் கூற முடியாது என்றும் கூறியுள்ளார்.  பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் தூக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதனால், பாட்டாளி மக்கள் கட்சியில் சலசலப்பு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.  பட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனராக இருப்பவர் ராமதாஸ். இவரது மகன் அன்புமணி ராமதாஸ் பட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக பாட்டாளி மக்கள் கட்சியில் பிரச்னை நிலவி வருகிறது. குறிப்பாக, அன்புமணி ராமதாஸ், ராமதாஸ் இடையே அதிகாரப் போட்டி நிலவி வந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பு கூட தனது பேரன் முகுந்தனை இளைஞரணி தலைவராக ராமதாஸ் நியமித்தபோது அன்புமணி, ராமதாஸ் ஆகியோருக்கு இடையே மோதல் வெடித்தது.

முகுந்தனுக்கு கட்சியில் பதவி கொடுத்தது அன்புமணிக்கு பிடிக்கவில்லை என பேசப்பட்டது. முகுந்தனுக்கு பதவி கொடுப்பதாக ராமதாஸ் அறிவித்த அதே மேடையில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவருக்கு பதவி கொடுத்தால் தொண்டர்கள் என நினைப்பார்கள் என அன்புமணி கேட்டார். அதற்கு, இது தன்னுடைய கட்சி என்றும் தான் நினைப்பதுதான் கட்சியில் நடக்கும் என மேடையிலேயே அன்புமணிக்கு ராமதாஸ் பதிலடி கொடுத்தார்.

கடந்தாண்டு மக்களவை தேர்தல் நேரத்தில், கூட்டணி அமைப்பது தொடர்பாக ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகவும் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, பாஜகவுடன் கூட்டணி அமைக்க அன்புமணி விரும்பியதாகவும் ஆனால், ராமதாஸ், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பியதாகவும் கூறப்பட்டது.

ஆனால், அன்புமணியின் வலியுறுத்தல் காரணமாக கடைசியில் பாஜகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் சம்மதம் தெரிவித்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இருப்பினும், அந்த தேர்தலில் பாமக படுதோல்வியை சந்தித்தது. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தொடங்கி, 2019 மக்களவை தேர்தல் என தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது பாமக.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கூட அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பாமக, 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இல் மட்டுமே வெற்றிபெற்றது. இந்த சூழலில், அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாமகவில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.

ஓசூர் கோயில் பிரசாதத்தில் பாம்பு.. பக்தர்கள் அதிர்ச்சி..!
ஓசூர் கோயில் பிரசாதத்தில் பாம்பு.. பக்தர்கள் அதிர்ச்சி..!...
பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஹிட்.. சூர்யாவின் 'ரெட்ரோ' வசூல் எவ்வளவு?
பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஹிட்.. சூர்யாவின் 'ரெட்ரோ' வசூல் எவ்வளவு?...
SIP : 20 ஆண்டுகளுக்கு ரூ.5,000 - 10 ஆண்டுகளுக்கு ரூ.10,000?
SIP : 20 ஆண்டுகளுக்கு ரூ.5,000 - 10 ஆண்டுகளுக்கு ரூ.10,000?...
இன்னும்100 நாட்களில்.. ரஜினியின் கூலி படக்குழு வெளியிட்ட வீடியோ!
இன்னும்100 நாட்களில்.. ரஜினியின் கூலி படக்குழு வெளியிட்ட வீடியோ!...
மகா கும்பமேளா வருமானம் மூலம் கார் வாங்கிய பாபா!
மகா கும்பமேளா வருமானம் மூலம் கார் வாங்கிய பாபா!...
ஒரே படத்தில் ஹீரோ மற்றும் வில்லனாக நடிக்கிறாரா சூரி ?
ஒரே படத்தில் ஹீரோ மற்றும் வில்லனாக நடிக்கிறாரா சூரி ?...
கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏன்..? உண்மையை உடைத்த கோலி!
கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏன்..? உண்மையை உடைத்த கோலி!...
ரெடியா இருங்க - பாதுகாப்பு ஒத்திகை குறித்து அரசு அறிவுறுத்தல்!
ரெடியா இருங்க - பாதுகாப்பு ஒத்திகை குறித்து அரசு அறிவுறுத்தல்!...
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்த மிதுன் ஜெய் சங்கர் யார் தெரியுமா
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்த மிதுன் ஜெய் சங்கர் யார் தெரியுமா...
வீடியோ கால் மூலம் சிகிச்சை - பலியான பச்சிளம் குழந்தைகள்!
வீடியோ கால் மூலம் சிகிச்சை - பலியான பச்சிளம் குழந்தைகள்!...
உங்கள் கனவில் அனுமன் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?
உங்கள் கனவில் அனுமன் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?...