அப்படிப்போடு.. வந்தாச்சு ஸ்பெஷல் பள்ளி பேருந்து.. இனி கவலையில்லை!
Special School Government Bus: தமிழ்நாடு அரசு, சென்னை மாணவ, மாணவியரின் பயணச் சிரமத்தை குறைக்க 50 சிறப்புப் பேருந்துகளை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி காலை, மாலை நேர கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தத் திட்டம் மூலம் மாணாக்கர்களுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணாக்கர்களுக்கு சிறப்பு பேருந்து
சென்னை, ஆகஸ்ட் 19: சென்னையில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு சிறப்பு பேருந்து திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன் தொடக்கவிழா நேற்று (ஆகஸ்ட் 18) நடைபெற்றது. தமிழ்நாட்டில் பள்ளிகளில் இலவச பயண அட்டை திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. அதே சமயம் கல்லூரி பயிலும் மாணவ மாணவிகளுக்கு பேருந்து கட்டணத்தில் சலுகைகள் அடிப்படையில் பயண அட்டை செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் 2025 – 2026 கல்வி ஆண்டிற்கான பஸ் பாஸ் எனப்படும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 35, 12,147 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. சுமார் சென்னையை பொருத்தவரை சுமார் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 4,10,000 மாணவ மாணவிகளுக்கு பயண அட்டைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச பஸ் பாஸ் வழங்கும் நிகழ்ச்சி
நம் மாணவர்களின் கல்விக்குத் துணை நிற்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1996-97 காலகட்டத்தில் இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை தந்தார்கள்!
அத்திட்டத்தின்படி, மாணவர்களுக்கு 2025-2026 கல்வி ஆண்டிற்கான கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டைகளை நம் #ChepaukTriplicane தொகுதியில் உள்ள லேடி… pic.twitter.com/xC18E9tlgM
— Udhay (@Udhaystalin) August 18, 2025
இப்படியான நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போக்குவரத்து துறை சார்பில் 2025 – 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பயண அட்டைகளை வழங்கினார்.
மாணவ – மாணவிகளுக்கு மகிழ்ச்சி செய்தி
தொடர்ந்து சென்னை மாநகரில் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் தினசரி பேருந்து பயணத்தின் போது பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை வேலைகளில் பேருந்துகளில் இடம் கிடைக்காமல் படிகளில் நின்று கொண்டும் , ஜன்னல் கம்பிகளில் தொற்றிக் கொண்டும் செல்லும் சூழலுக்கு உருவாகியுள்ளனர். அது மட்டுமல்லாமல் உள்ளே கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு விட கூட சிரமப்படும் சூழல் ஏற்படுகிறது.
இத்தகைய சவால்களை தவிர்க்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் முதற்கட்டமாக 25 பள்ளிகளுக்கு 50 சிறப்பு மாணவர் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகள் குறிப்பிட்ட பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு அதன் வழித்தடங்களில் பள்ளி மாணவ மாணவியர்களை மட்டுமே ஏற்றி பள்ளி வளாகத்தில் உள்ளே சென்று இறக்கி விடப்படும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியை செய்து தொடங்கி வைத்தார்.
அதனால் இனிமேல் மாணவ, மாணவியர்கள் சிரமமின்றி பேருந்துகளில் பயணிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் மற்ற இடங்களுக்கும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும், திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.